பங்களாதேசில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு எதிராக தீவிரப் போராட்டங்கள் நடைபெற்று, பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளன.
பங்களாதேசில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது பல இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. அரசு கட்டிடங்கள், வாகனங்கள் தீ வைக்கப்பட்ட நிலையில், நாட்டில் பாதுகாப்பு படை (BGB) களமிறக்கப்பட்டுள்ளது. யூனுஸ் அரசின் உத்தரவுகளைப் பின்பற்றாதவர்களுக்கு காணும் இடத்தில் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போராட்டக்காரர்கள்
முகமது யூனுஸ் நிறுவிய கிராமின் வங்கி கிளைகள் ஆனது பல இடங்களில் போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன. “யூனுஸ் அமெரிக்காவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்” என்ற கோஷம் நாடெங்கும் எழுந்துள்ளது. இது யூனுஸ் அரசின் நிலைப்பாட்டை கடுமையாக உடைக்கும் வகையில் மாறி உள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்
இடைக்கால அரசை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் எனக் கோரி அவாமி லீக் கட்சி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் முழு முடக்கத்தை அறிவித்திருந்தது. இந்த போராட்டம் யூனுஸ் அரசுக்கு மேலும் அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது.
தாக்காவில் கடைகள் மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி கிடந்ததாக அவாமி லீக் கூறுகிறது. நவம்பர் 17 அன்று ஷேக் ஹசீனாவுக்கு எதிரான மனிதாபிமான குற்றச்சாட்டுகள் தொடர்பான தீர்ப்பு வெளியாகியுள்ளது மேலும் பதற்றத்தை வெளியிட்டுள்ளது.
யூனுஸ் மீது கடும் குற்றச்சாட்டு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, யூனுஸ் அரசை “அரசியலமைப்பை தகர்த்த அரசு” என குற்றம்சாட்டியுள்ளார். “சிறுபான்மை மக்களை ஒடுக்குகிறார், தேர்தல் உரிமையை பறிக்கிறார்” என CNN-News18 பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். யூனுஸ் அரசுக்கு ஜனநாயக ஆதரவு இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டம் தோல்வி
அதே நேரத்தில், யூனுஸ் அரசு அவாமி லீக் கூறிய போராட்டம் வெற்றி பெறவில்லை என்று முழுமையாக மறுத்துள்ளது. “தாக்கா காவல் ஆணையர் லாக்டவுன் பற்றி கூறும் வைரல் வீடியோ AI மூலம் தயாரிக்கப்பட்டது என அரசு கூறியுள்ளது. நாடு முழுவதும் சோதனைச்சாவடிகள், கூடுகைகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. போராட்டம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
