பிரபல டைம் வார இதழ் ரூ.1,395 கோடிக்கு விற்பனை: வாங்கிய அந்த கோடீஸ்வரர் யார்?

95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வார இதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.

Marc Benioff Buys  Time Weekly Magazine

95 ஆண்டுகள் பாரம்பரியமும், உலகப்புகழ் பெற்றதுமான டைம் வார இதழ் மெரிடித் கார்பிடம் இருந்து பெரும் கோடீஸ்வரரான சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மார்க் பெனிஆப், அவரின் மனைவி லினியும் ரூ.1,395 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளனர். கடந்த 8 மாதங்களாக இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சு முடிவுக்குவந்ததையடுத்து, 19 கோடி அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. Marc Benioff Buys  Time Weekly Magazine

அமெரிக்காவைச் சேர்ந்த டைம் வார ஏடு கடந்த 1923-ம் ஆண்டு ஹென்றி லூஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. இதன் ஐரோப்பிய பதிப்பகம் லண்டனில் இருந்து பிரசுரமாகி வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா நாடுகளிலும் அச்சாகிறது. ஆசியப் பதிப்பு ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. Marc Benioff Buys  Time Weekly Magazine

தெற்கு பசிபிக் பதிப்பு சிட்னியை தலைமையிடமாகக் கொண்டும் இயங்குகிறது. ஏறக்குறைய உலகம் முழுவதிலும் 50 நாடுகளில் டைம் ஏடு அச்சாகிறது. உலகிலேயே மிக அதிகமான விற்பனையாகும் வார ஏடு டைம் இதழாகும். இதன் வாசகர்கள் எண்ணிக்கை 2.6 கோடியாகும். இதுகுறித்து தொழிலதிபர் மார்க் பெனியாப் கூறுகையில், நானும் எனது மனைவியும் டைம் வார இதழில் முதலீடு செய்திருக்கிறோம். Marc Benioff Buys  Time Weekly Magazine

இந்த நிறுவனம் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இதழ், வலிமையான வர்த்தகத்துக்கும் நம்பிக்கையானது. அதன்காரணமாகவே என் குடும்பத்தார் இதில் முதலீடு செய்தனர். ஆனால்,டைம் வார ஏட்டின் அன்றாட பணிகளிலோ, ஆசிரியர் குழுவிலோ எங்களின் தாக்கம் தலையீடு இருக்காது என்று தெரிவித்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios