Asianet News TamilAsianet News Tamil

இந்திய பகுதிகளை இணைத்து வரைபடம்... சீனாவை அடுத்து சட்டாம்பிள்ளைத்தனம் காட்டும் நேபாளம்..!

நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய எல்லைக்குட்பட்ட மூன்று பகுதிகள் அந்நாட்டு வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 

Map of Indian Territories ... Nepal showing China
Author
Nepal, First Published Jun 18, 2020, 5:21 PM IST

நேபாள நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத் திருத்தத்தின் மூலம் இந்திய எல்லைக்குட்பட்ட மூன்று பகுதிகள் அந்நாட்டு வரைபடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நேபாள் பாராளுமன்றத்தில் புதிய சட்டத் திருத்தம் செய்து, இந்திய எல்லைக்குட்பட்ட மூன்று பகுதிகளை தனது நாட்டின் வரைபடத்துடன் உள்ளடக்கியுள்ளது. ஏகோபித்த கருத்தில் அடிப்படையில் இன்று இந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறியுள்ளது. லிபுலேக், கலபணி, லிம்பியதுரா ஆகிய பகுதிகளை தம் நாட்டின் எல்லையுடன் உள்ளடக்கி நேபாளம் கொண்டுவந்த மசோதாவை அவையின் 57 உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்று வாக்களித்துள்ளனர்.Map of Indian Territories ... Nepal showing China

உத்தரகண்டின் தர்சுலே எனும் பகுதியுடன் லிபுலேக் எனும் பகுதியை இணைக்கும் விதமாக இந்தியா 80 கி.மீ.-க்கு சாலை அமைத்தது. கடந்த மே மாதம் 8ம் தேதி ராஜ்நாத் சிங் அதைத் திறந்துவைத்தார். தங்கள் எல்லைக்குள் அந்தச் சாலை குறுக்கிடுவதாக நேபாளத்திலிருந்து அப்போதே எதிர்க்குரல் வந்தது. அப்போதிலிருந்து இந்தியா - நேபாளம் இடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டது.

Map of Indian Territories ... Nepal showing China

சமீபத்தில் இணையவழியில் நடைபெற்ற பாஜக கூட்டமொன்றில் பேசிய ராஜ்நாத் சிங், தனது உரையில், நேபாளத்துடனான இந்திய உறவை யாராலும் முறியடிக்கவே முடியாது என்று கூறியிருந்த நிலையில், நேபாளம் இவ்வாறு சட்டத் திருத்தம் செய்திருப்பது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் விதமாக அமைந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios