விற்பனையில் அடித்து தூக்கிய 'காண்டம்..’ உக்ரைன் - ரஷ்யா போர் தான் காரணம்.. என்னங்க சொல்றீங்க ?
ரஷ்யா மக்கள் பலர் ஆணுறைகளை வாங்கி ஸ்டாக் வைக்க துவங்கிவிட்டனர். இதனால் கடந்த மார்ச் மாதத்தில் கடந்த மார்ச் மாதத்தை விட ஆணுறையின் விற்பனை 3 மடங்கு உயர்ந்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் :
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற உலகின் முன்னணி நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்தது. இதனால் ரஷ்யாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் பல அடுத்தடுத்து தனது வர்த்தகத்தை மூடிவிட்டு அந்நாட்டை விட்டு வெளியேறியது. இப்படிப் பல நிறுவனங்கள் வெளியேறினாலும் பார்மா நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டன் நாட்டின் ரெக்கிட் தொடர்ந்து வர்த்தகம் செய்து வருகிறது.
இந்த நிறுவனம் தான் டியூரெக்ஸ் (Durex) காண்டம் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் எப்போது வேண்டுமானாலும் இதற்கும் தடை விதிக்கப்படலாம் என்ற சூழ்நிலையும் இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் எதிர்காலத் தேவைக்காக அதிகளவிலான காண்டம்-களை வாங்கிக் குவித்து வருகின்றனர். மார்ச் மாதத்தின் முதல் 2 வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் வைல்ட்பெர்ரிஸ் என்னும் ஆன்லைன் ரீடைல் தளத்தில் காண்டம் விற்பனை சுமார் 170 சதவீதம் அதிகரித்துள்ளது.
காண்டம் விற்பனை அதிகரிப்பு :
மேலும் ரெக்கிட் நிறுவனத்தின் காண்டம் விற்பனை 36.6 சதவீதம் அதிகரித்துள்ளது, மேலும் சூப்பர்மார்கெட்-களில் அதிகப்படியான டிமாண்ட் காரணமாகக் காண்டம் விலை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்ட நிலையிலும் விற்பனையில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. மறுபுறம் இந்தியாவில் காண்டம் ஏற்றுமதி ரஷ்யாவுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரஷ்யாவில் ஒட்டுமொத்த காண்டம் விற்பனை சந்தையில் 90 சதவீதம் வெளிநாட்டுச் சந்தைகள் வைத்துள்ளது. இந்நிலையில் டியூரெக்ஸ், கான்டெக்ஸ்,ஹஸ்ஸார் மற்றும் பிற பிராண்டு காண்டம்களைத் தயாரிக்கும் பிரிட்டன் நாட்டு நிறுவனமான ரெக்கிட் ரஷ்ய காண்டம் விற்பனை சந்தையில் சுமார் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை வைத்துள்ளது.
ரஷ்யா மக்கள் பலர் ஆணுறைகளை வாங்கி ஸ்டாக் வைக்க துவங்கிவிட்டனர். இதனால் கடந்த மார்ச் மாதத்தில் கடந்த மார்ச் மாதத்தை விட ஆணுறையின் விற்பனை 3 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.