Asianet News TamilAsianet News Tamil

வரலாற்றில் முதல் முறை... பாகிஸ்தான் டிஎஸ்பியாக ஒரு இந்து பெண் பதவியேற்பு!!

வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு இந்து பெண் டிஎஸ்பி ஆக பதவி ஏற்றுள்ளார். 

manisha ropeta becomes pakistans first hindu woman dsp
Author
Pakistan, First Published Jul 29, 2022, 10:30 PM IST

வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானில் ஒரு இந்து பெண் டிஎஸ்பி ஆக பதவி ஏற்றுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் ஜாகோபாத் என்ற இடத்தில் பிறந்தவர் மனிஷா ரூபேட்டா. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் தன்னுடைய சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டதால், மனிஷா மற்றும் அவருடைய 3 சகோதரிகள் 1 தம்பியை அவருடைய தாயார் படிக்க வைத்தார்.

இதையும் படிங்க: நெருப்புடன் விளையாட வேண்டாம்... அமெரிக்காவை ஏறி அடித்த ஜி ஜின்பிங்... வெலவெலத்துப் போன பிடன்

இந்த நிலையில் மனிஷாவின் 3 சகோதரிகளும் மருத்துவம் படித்து டாக்டராக இருக்கும் நிலையில், அவருடைய தம்பியும் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இதே போன்று மனிஷாவும் மருத்துவம் படிப்பதற்காக நுழைவு தேர்வு எழுதியுள்ளார். ஆனால் 1 மதிப்பெண் குறைந்ததால் மனிஷாவுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கூகுளில் வேலைக்கு சேரும் கனவை 39வது முயற்சியில் நிறைவேறிய அமெரிக்கர்; எப்படி?

இருந்த போதிலும் மனம் தளராத மனிஷா, காவல்துறையை தேர்வு செய்து உயர் பதவிக்கான தேர்வை எழுதினார். இந்த தேர்வில் வெற்றி பெற்று 16 ஆவது இடத்தை பிடித்தார். இதன் காரணமாக சிந்து மாகாணத்தின் துணை போலீஸ் சூப்பிரண்டாக அவர் தேர்வாகியுள்ளார். இவர் தற்போது பயிற்சியில் இருக்கிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் ஒரு இந்து பெண் டிஎஸ்பி ஆக பதவி ஏற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow Us:
Download App:
  • android
  • ios