Asianet News TamilAsianet News Tamil

தூங்கினால் மரணம்… தவிப்புடன் காலத்தை கடத்தும் இளைஞர்!

man suffered by a disease which cant let you sleep
man suffered by a disease which cant let you sleep
Author
First Published Aug 5, 2017, 4:35 PM IST


இங்கிலாந்தின் சதர்ன் ஹெமிஸ்பயரில் வசித்துவரும் இளைஞர் ஒருவர் தூங்கினால், மரணத்தை தழுவி விடும் வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மனிதர்களைப் போல் இயல்பாகத் தூங்கினால், அவருக்கு அதுவே கடைசி தூக்கமாக மாறிவிடும் என்பதால், பல்வேறு சிகிச்சைகளுடன் தூங்குகிறார்.

சதர்ன் ஹெமிஸ்பயர் , கோஸ்போர்ட் நகரில் வசித்து வரும் தம்பதிகள் பீட்டர், கிம். இவர்களின் 18 வயது மகன் லியாம் டெர்பிஷையர். இவர் தான் இந்த வினோத நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்.

man suffered by a disease which cant let you sleep

லியாம் பிறக்கும்போதே அவரின் உடல்நிலையை ஆய்வு செய்த, மருத்தவர்கள், 6 வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் எனத் தெரிவித்தனர். ஆனால், அதன்பின்னும் அவரின் உயிரை தொடர்ந்து காப்பாற்றி வருவதற்கு அவரின் பெற்றோர் பீட்டர், கிம் காரணமாகும்.

லியாமுக்கு இருக்கும் நோயின் பெயர் ‘கன்ஜென்சனல் சென்ட்ரல்ஹைபோவென்டிலேசன் சின்ட்ரோம்’ ஆகும். இந்த நோயால் பீடிக்கப்பட்டவர்கள், தூங்கினால், அவர்களின் இதயம், நுரையீரல் செயல் இழந்து உயிரிழக்க நேரிடும் என்ற வினோதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் உலகம் முழுவதும் 1500 பேர் மட்டுமே இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

லியாம் பிறந்ததில் இருந்து அவரை கண்ணும், கருத்துமான அவரின் பெற்றோர்பீட்டர், கிம் ஜி.எம்.எஸ். கருவிமூலம் 24 மணி நேரமும் பாதுகாத்து வருகின்றனர்.

man suffered by a disease which cant let you sleep

இது குறித்து லியாமின் தாய் கிம் கூறியதாவது-

எனது மகன் சென்ட்ரல் ஹைபோவென்டிலேசன் சின்ட்ரோம் எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனது மகன் தூங்கினால், அவரின் இதயம், நுரையீரலில் இருந்து தொண்டை பகுதிக்கு செல்லும் நரம்புகள்,மூளைக்கு தூங்கும் செய்தியை அனுப்பாது. இதனால், நீங்கள் தூங்குவதை மூளை மறந்துவிடுவதால், ஒரு கட்டத்தில் ஆழ்ந்த தூக்கத்துக்கு செல்லும்போது, இதயம், நுரையீரல் செயல் இழந்து இறக்க நேரிடும்.

இதற்காக பிரத்யேக எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு எனது மகனுக்கு தூக்கம் வரும்போது, அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் நாங்கள் தூங்க வைத்து வருகிறோம். இந்த கருவிகள் இல்லாமல் எனது மகன் தூங்கினால், அவன் இறந்துவிடுவான். இவ்வாறு தெரிவித்தார்.

லியாம் தற்போது பள்ளியில் படித்து வருகிறார், எல்லோரிடமும் அனைத்து குழந்தைகள் போல இயல்பாகவே பழகி வருகிறார். இருந்தபோதிலும் இவரின் வினோத நோய்க்கு மருந்துகளும், சிகிச்சையும் இன்னும்  ஆய்வு அளவில் இருப்பதால், இரவு மற்றவர்களின் கண்காணிப்பில் தூங்கி வேண்டிய நிலையில் இருக்கிறார்.

இந்த பிரத்யேக கருவிகள் இல்லாமல் லியாம் தூங்கினால், அதுவே அவருக்கு கடைசி தூக்கமாக இருக்கும்.

Follow Us:
Download App:
  • android
  • ios