புத்தாண்டு தினத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பத்து நாட்கள்கூட ஆகாத நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது ஜப்பான் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை அடுத்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சார்பில் சுனாமி எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை.

ஜனவரி 1 ஆம் தேதி, புத்தாண்டு அன்று ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிறிதும் பெரிதுமாக ஏற்பட்ட பல நிலநடுக்கங்கள் பரவலான அழிவை ஏற்படுத்தியது.

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

இந்த நிலநடுக்கத்தால் இருந்தவர்கள் எண்ணிக்கை 200 ஐத் தாண்டியது. காணாமல் போன சுமார் 100 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இடிபாடுகளை அகற்றுவதற்கு மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர்.

Scroll to load tweet…

இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு பத்து நாட்கள்கூட ஆகாத நிலையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது ஜப்பான் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

AI வாய்ஸ் எப்படி இருக்கும்? சைபர் கிரிமினல்களை ஈசியா கண்டுபிடிக்க சில டிப்ஸ்!