Asianet News TamilAsianet News Tamil

26 முறை ஆத்திரம் தீர குத்திய பணிப் பெண்! 70 வயது மூதாட்டி பலி! - சிறாரா? இல்லையா? குழம்பிய நீதிமன்றம்!

சிங்கப்பூரில், தனது முதலாளியின் மாமியாரை (70 வயது)26 முறை கத்தியால் குத்தி கொலை செய்த மியான்மர் பணிப்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Maid sentenced to life imprisonment for murdering a 70-year-old woman by stabbing her 26 times
Author
First Published Jul 4, 2023, 11:33 AM IST

மியான்மர் நாட்டைச் சேர்ந்த ஜின் மார் நவி, கடந்த ஜனவரி 2018ல் சிங்கப்பூருக்கு பணிப்பெண் வேலைக்காக வந்தார். ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கும் சேர்ந்துள்ளார். அவ்வீட்டில் இருந்து மூதாட்டி, பணிப்பெண்ணை அடிக்கடி வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரதமடைந்த பணிப்பெண் ஜின் மார் நவி, மூதாட்டியை 26முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

ஆனால், பணிப்பெண் ஏஜன்சி மூலம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆண்ட்ரே மணியம், குற்றம்சாட்டப்பட்ட பெண் சிறாராக இருப்பதாக குறிப்பிட்டார். பணிப்பெண் ஜின் மார் நவியின் பாஸ்போரட் சோதனையிட்ட போது, அவரது வயது 23 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் மருத்துவமனையில் நடத்தப்பட்ட எலும்பு வயது பரிசோதனையில் பணிப்பெண் ஜின் மார் நவி-யின் வயது 17 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவரது வயது 23 என அறிவிக்குமாறு முகவரால் அறிவுறுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரில் ஆண் நண்பருக்கு பாலியல் வன்கொடுமை: 12 கசையடி, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

மேலும், பணிப்பெண்ணுக்கு வயது குறைவாக இருந்ததால் மரண தண்டனை விதிக்க முடியாது என்று கூறிய நிதிபதி, ஆயுள் தண்டனை மட்டுமே விதிக்க முடியும் என்றும், அவள் பெண் என்பதால் பிரம்பு அடியும் கொடுக்க முடியாது என்றார்.

ஆயுள் தண்டனையை அரசு தரப்பு எதிர்க்கவில்லை. மரண தண்டனைக் குற்றங்களுக்கான சட்ட உதவித் திட்டத்தின் கீழ் Zin Mar Nwe சார்பில் ஆஜரான பாதுகாப்பு வழக்கறிஞர் கிறிஸ்டோபர் பிரிட்ஜஸ், தனது வாடிக்கையாளருக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது என்றார். மேலும், அவர் Zin Mar Nwe இன் டைரி பதிவுகளை சுட்டிக்காட்டினார், அதில், அவர் தனது பெற்றோரையும் காதலனையும் தவறவிட்டதாகவும், அவளுடைய நினைவுகளால் அவர் மனஉலைச்சளுக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்தார்.

சிங்கப்பூரை உலுக்கிய கொலை வழக்கு.. சிறையில் உள்ள இந்திய வம்சாவளி பெண்ணுக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறை..

தொடர்ந்து, பிரிவு 300(c) இன் கீழ் கொலைக்கான தண்டனை மரணம் அல்லது ஆயுள் தண்டனை என குறிப்பிட்ட நீதிபதி, Zin Mar Nwe ஒரு பெண் என்பதால் பிரம்பு அடிக்க முடியாது. ஆகவே ஆயுள் தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார்.

சிங்கப்பூரில் அதிகரித்த தற்கொலைகள்! கடந்த ஆண்டில் மட்டும் 476 பேர் தற்கொலை!

Follow Us:
Download App:
  • android
  • ios