Asianet News TamilAsianet News Tamil

இலங்கை பிரதமரானார் ராஜபக்சே …. ரணில் விக்கிரமசிங்கே நீக்கம்… மைத்திரி பாலசிறிசேனா அதிரடி…

இலங்கையின் பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு பாஜக எம்.பி. சுப்ரமணியன் சுவாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இலங்கை ஆளும் கட்சியில் பிளவு ஏற்பட்டதையடுத்து இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள தமிழர்களுக்கு பெரும் பின்னடைவாகவே கருதப்படுகிறது.

Mahinda rajabakshe becone sri langan prime minister
Author
Sri Lanka, First Published Oct 26, 2018, 8:56 PM IST

இலங்கையின் பிரதமராக ரனில் விக்ரமசிங்கே பதவி வகித்து வந்தார்.தற்போது அவர் அப்பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.அதிபர் சிறிசேன கட்சியும் இலங்கை அரசியலில் இருந்து விலகியது.

 

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன முன்னிலையில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். ரணில் விக்ரமசிங்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய நிலையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஆளும் கூட்டணியில் ஏற்பட்ட பிளவை அடுத்து பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து  பாஜக எம்.பி. சுப்ரமணியன்  சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் எனது நண்பர் ராஜபக்சே இலங்கை பிரதமர் ஆகபதவி ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios