Asianet News TamilAsianet News Tamil

லிபியாவில் விமானம் கடத்தலில் 111 பயணிகள் விடுவிப்பு

lybian plane
Author
First Published Dec 24, 2016, 4:46 AM IST


லிபியாவில் விமானம் கடத்தலில் 111 பயணிகள் விடுவிப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவின் சாபா நகரில் இருந்து தலைநகர் திரிபோலிக்கு புறப்பட்ட விமானத்தை நடுவானில் கடத்தல்காரர்கள், மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா நாட்டுக்கு கடத்திச் சென்றனர்.

நீண்ட நேரம் கடத்தல்காரர்களுடன் அதிகாரிகள் சமசரம் பேசிய பின், அனைத்து பயணிகளும் விடுவிக்கப்பட்டனர்.

111 பயணிகள்

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான லிபாயாவின் சாபா நகரில் இருந்து அப்ரியாக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் தலைநகர் திரிபோலிக்கு நேற்று புறப்பட்டது. விமானத்தில் 118 பயணிகள் இருந்தனர். இதில் 111 பயணிகள், 7 விமான ஊழியர்கள் அடங்கும். பயணிகளில்82 ஆண்கள், 28 பெண்கள், ஒரு பச்சிளங் குழந்தையும் இருந்தது.

வெடிகுண்டு மிரட்டல்

விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, பயணிகள் வரிசையில் இருந்து எழுந்த கடத்தல்காரர்கள், விமானத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், தங்கள் கையிலும் வெடிகுண்டு இருப்பதாகவும் கூறினர். உடனடியாக, விமானத்தில் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா நாட்டில் தரை இறக்குமாறு உத்தரவிட்டனர்.

மால்டாவுக்கு கடத்தல்

இதைத் தொடர்ந்து  மால்டா நாட்டு தலைநகரில் உள்ள விமானநிலையத்தில் விமானத்தை  தரை இறக்க கட்டுப்பாட்டு நிலையத்தை தொடர்ந்து கொண்டு விமானி அனுமதி கோரினார்.

விமானம் கடத்தப்பட்டு இருப்பதை அறிந்த மால்டா விமான நிலைய நிர்வாகிகள், உடனடியாக மற்ற விமானங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மற்ற விமானங்களை தரையிறங்களவும் தடை விதித்து,அப்ரியாக் விமானம் தரையிறங்க அனுமதி அளித்தனர். இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு மால்டாவில் விமானம் தரை இறங்கியது.

தயார் நிலையில் படைகள்

 உடனடியாக, அவசர பாதுகாப்பு படையினர், மீட்புப்படையினர், ராணுவம் ஆகியோர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர். எந்த நேரமும், விமானத்துக்குள் அதிரடியாக நுழைந்து பயணிகளை பத்திரமாக மீட்க, வீரர்கள் தயாராக இருந்தனர். மால்டா தேசிய பாதுகாப்பு குழு இந்த ஆப்ரேஷனை செயல்படுத்த தயாராக இருந்தது.

சமரசப்பேச்சு

அதேசமயம், விமானத்துக்குள் இருந்த இரு கடத்தல் காரர்களுடன் சமரசப் பேச்சு நடத்த மால்டா அரசு ஒரு குழுவை அமைத்தது. அவர்கள் கடத்தல்காரர்களிடம் பேச்சு நடத்தினர். 2 மணி நேரப் பேச்சுக்குபின் நண்பகல் 1.44 மணிக்கு முதல்கட்டமாக 25 பயணிகளையும், அடுத்ததாக 25, அதன்பின், மீதமுள்ள பயணிகளையும் கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.

கடாபி ஆதரவாளர்கள்

இது குறித்து மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் கூறுகையில், “ கடத்தப்பட்ட விமானத்தில் இருந்த பயணிகள், அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் விமானத்தில் இருக்கின்றன. ஆனால், விமானிகள், ஊழியர்களை விடுவிக்காமல் கடத்தல்காரர்கள் இருவர் விமானத்துக்குள்ளேயே இருக்கின்றனர். அவர்கள் பயணிகளிடம் பேசியதில் இருந்து லியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபியின் தீவிர ஆதரவாளர்கள் என்பது தெரியவந்துள்ளது'' எனத் தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios