ஐந்தாண்டு உலகளாவிய போர்நிறுத்தத்திற்கு ஆணையம் வேண்டும்… ஐ.நா.விடம் முன்மொழியகிறார் மெக்சிகன் ஜனாதிபதி!!
ஐந்தாண்டுகளுக்கு உலகளாவிய போர் நிறுத்தத்தை ஊக்குவிக்க மூன்று நபர்கள் கொண்ட ஒரு ஆணையத்தை அமைக்கக்கோரி ஐ.நா.விடம் எழுத்துப்பூர்வ முன்மொழிவை சமர்ப்பிக்க உள்ளதாக மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு உலகளாவிய போர் நிறுத்தத்தை ஊக்குவிக்க மூன்று நபர்கள் கொண்ட ஒரு ஆணையத்தை அமைக்கக்கோரி ஐ.நா.விடம் எழுத்துப்பூர்வ முன்மொழிவை சமர்ப்பிக்க உள்ளதாக மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், உலகளாவிய போர் நிறுத்தத்தை ஊக்குவிக்க மூன்று நபர்கள் கொண்ட ஒரு ஆணையத்தை அமைக்கக்கோரி நான் எழுத்துப்பூர்வமாக முன்மொழிவை ஐ.நா.விடம் முன்வைப்பேன், இதற்கு ஊடகங்கள் எங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். போப் பிரான்சிஸ், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இந்த ஆணையம் அமைக்கப்படும். அதன் நோக்கம் என்னவென்றால், அவர்கள் மூவரும் சந்தித்து, எல்லா இடங்களிலும் போரை நிறுத்துவதற்கான ஒரு முன்மொழிவை விரைவில் முன்வைத்து, குறைந்தது ஐந்து வருடங்கள் போர்நிறுத்தம் செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவார்கள்.
இதையும் படிங்க: மின்சார கட்டணம் 264 % உயர்வு.. இருட்டில் தவிக்கும் இலங்கை மக்கள் ! அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி
இதனால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் மக்களுக்கு ஆதரவளிக்க தங்களை அர்ப்பணிக்கின்றன. குறிப்பாக போராலும் அதன் விளைவுகளாலும் அதிகம் பாதிக்கப்படும் மக்கள், பதற்றம் இல்லாமல், வன்முறை இல்லாமல், அமைதியுடன் ஐந்து ஆண்டுகள் வாழ்வார்கள் என்று தெரிவித்தார். முன்னதாக லோபஸ் ஒப்ராடோர் போர்க்கால நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும் சீனா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று உலக வல்லரசுகளை அமைதியை நாட அழைத்துள்ளார். அவர்களுடைய மோதல்களால், ஒரு வருடத்திற்கு மேல் அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இலங்கை-யை விட்டு வெளியேற மகிந்தா ராஜபக்ச-வுக்கு தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் அதிரடி
இதுக்குறித்து லோபஸ் ஒப்ராடோர் கூறுகையில், அவர்கள் உலகப் பொருளாதார நெருக்கடியைத் தூண்டிவிட்டு, பணவீக்கத்தை அதிகரித்து, உணவுப் பற்றாக்குறையையும், அதிக வறுமையையும், மிக மோசமான ஒரு சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் கடந்த ஒரு வருடமாக அதைத்தான் செய்தார்கள். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை நாங்கள் முன்மொழிவதை ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறேன். கூடுதலாக, இந்த போர்நிறுத்தம் தைவான், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் விஷயத்தில் உடன்பாடுகளை எட்டுவதற்கு உதவுகிறது. மேலும் மோதலை தூண்டும் வகையில் இந்த உடன்பாடு ஊக்குவிப்பதில்லை. இந்த மூன்றில் மூன்று அரசாங்கங்களுக்கும் விருப்பம் இருந்தால் இந்த உடன்பாட்டை எட்டுவது சாத்தியமாகும். உலகின் அனைத்து அரசாங்கங்களும் ஐ.நா.வுக்கு ஆதரவாக இணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.