Asianet News TamilAsianet News Tamil

#UnmaskingChina:கொலைகார சீனாவுக்கு சமாதிகட்ட காத்திருக்கும் குட்டி குட்டி நாடுகள்..!!

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் நிலையில், சீனா மட்டும் தனது நாடு பிடிக்கும் வக்கிரத்தை தனது அண்டை நாடுகளிடம் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறது. 

Little countries awaiting for revenge with China
Author
Delhi, First Published Jun 27, 2020, 1:42 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

உலகமே கொரோனாவை எதிர்த்து போராடி கொண்டிருக்கும் நிலையில், சீனா மட்டும் தனது நாடு பிடிக்கும் வக்கிரத்தை தனது அண்டை நாடுகளிடம் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறது.  சீனாவின் எல்லை விரிவாக்க திட்டத்தால் பல்வேறு நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்சீனக் கடல் தொடங்கி கிழக்கு லடாக் எல்லைவரை அதன் நாடு பிடிக்கும் திட்டம் விரிவடைந்துள்ளது.  சீனாவின் கைங்கரியத்தை கட்டுப்படுத்த  அமெரிக்கா ஒருபுறம் தீவிரம் காட்டி வரும் நிலையில், சீனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை சீனாவை எச்சரித்தாலும்,   அதையெல்லாம் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சீனா தன்வேளையை கனகச்சிதமாக அரங்கேற்றி வருகிறது, குறிப்பாக வளம் கொழிக்கும் பகுதியென அடையாளம் காணப்பட்டுள்ள தென் சீனக் கடலில் தனது ஆதிக்கத்தை சீனா வலுப்படுத்தி வருகிறது. அங்கு தனது விமானப்படை விமானத்தின் மூலம் வேவு பார்த்து அங்கு செயற்கை தீவுகளையும் அமைத்து ராணுவ தளத்தை விரிவுபடுத்திஉள்ளது. 

மேலும் அப்பகுதியில் கடலுக்கு அடியில் ரகசிய பதுங்கு குடில்களையும், கண்காணிப்பு தளங்களையும் அமைத்துவருதுடன், தென் சீனக்கடல் பகுதி தனக்கே சொந்தமெனவும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்கு வியட்நாம், புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான் ஆகிய நாடுகளையும் அச்சுறுத்தி அந்நாடுகளுக்கு சொந்தமான தீவுகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற எதிரி  நாடுகளுடன் போர் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் ஏவுகணைகள் மற்றும் மற்றும் போர் தளவாடங்களையும் சீனா அதிகப்படுத்தி வருகிறது. தெற்கு சீனக்கடல் பகுதியில்  80% இடத்தை தனக்கே சொந்தம் என சீனா உரிமை கோரி வருகிறது. பார்ஷெல் தீவு, ஸ்பாட்லி தீவு  போன்றவற்றையும் சீனா உரிமை கொண்டாடிவருகிறது. கிட்டத்தட்ட தெற்கு சீன கடல் பகுதியில் சுமார் 2000 கிலோ மீட்டர் தொலைவு தூரத்தை ஆக்கிரமித்துள்ள சீனா, இந்தோனேசியா, மலேசியா வரை ஆதிக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது. 

மேலும் தைவானில் சீனாவுக்கு முழு இறையாண்மை இருப்பதாக கூறிவருவதுடன், தைவான் தனது நாட்டில் ஒரு பகுதியெனவும்  உரிமை கொண்டாடிவருகிறது.  தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடு என பிரகடனப்படுத்தி வரும் நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் சீனா அடிக்கடி தனது போர் விமானங்களை தைவான் வான்பரப்பில் பறக்கவைத்து அச்சுறுத்தி வருகிறது. அதேபோல், ஹாங்காங்கில் தனது கொடூரமுகத்தை காட்டி வரும் சீனா அங்கு அமைதியற்ற சூழலை உருவாக்கி உள்ளது.  சிறப்பு சட்டம் மூலம் ஹாங்காங்கை தன் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரும் முயற்சிகளில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹாங்காங்கில் நிர்வாக தலைவர் கேரி லாம், ஹாங்காங் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான புதிய சர்ச்சைக்குரிய மசோதா ஒன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது, இந்த மசோதாவுக்கு எதிராகவும், சீனாவுக்கு எதிராகவும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதை ஒடுக்க சீன ராணுவம் களத்தில் இறங்கியுள்ளதால் ஹாங்காங் கலவர பூமியாக மாறியுள்ளது. சீனாவின் உண்மையான விரிவாக்க முகத்தை, அதன் அதிகாரத்தை நிலைநாட்டிய நாடுகளில் மிக முக்கியமானது திபெத்,  சீன கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் இரக்கமற்ற இராணுவமும் செய்த அட்டூழியங்களுக்கு சாட்சியமளிக்கும் ஒரு நாடாகவே இன்னும் திபெத் உள்ளது. சீனாவின் கொடுமையால் அத்தேசத்திலிருந்து இந்தியா ஓடிவந்த மக்கள், அந்த கொடுமைகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக லடாக்கில் திபெத்தியார்கள் வசிக்கும் கிராமங்கள் அதிகமுள்ளன. அங்கு திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த அகதிகள் இப்போது பல ஆண்டுகளாக இங்கு வாழ்கின்றனர். கம்யூனிஸ்ட்டு என கூறிக்கொள்ளும் சீனா, ஆரம்பத்தில் திபெத்திய மக்களை ரேஷன் மற்றும் பணத்தைகாட்டி கவர்ந்திழுத்து, பின்னர் அவர்களின் நிலத்தையும் அபகரித்து கொண்டது.  அவர்களின் கலாச்சாரத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் அது அழித்தது. சீனாவும் அதன் இராணுவமும் இன்றும் கூட திபெத்தியர்களை துன்புறுத்திவருகிறது.  இதுவரை 10 லட்சம் திபெத்தியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மடங்களில் 98 சதவீதம் சீனாவின் ஆதிக்கத்தால் பாழடைந்துள்ளதாகவும் கூறுகின்றனர். 1959 இல் திபெத்தை சீன ஆக்கிரமித்த பின்னர், 560 திபெத்திய குடிமக்கள் லடாக் வந்தடைந்தனர். தற்போது, ​​லடாக் முழுவதும் 7500 திபெத்திய அகதிகள் உள்ளனர். அவர்கள் 1975 வரை கூடாரங்களிலும், முகாம்களிலும் வாழ்ந்தனர். பின்னர் லடாக்கின் ஆங்லிங், சோக்லாம்சர் மற்றும் ஜங்தாங் கிராமங்களில் குடியேறினர். திபெத்திய அகதிகள் இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்துவரும் அதே நேரத்தில் திபெத்தை சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கவும் விரும்புகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios