மலைப்பாம்புடன் ஜாலியாக விளையாடும் சிறுவன்... பதைபதைக்க வைக்கும் வீடியோ வைரல்!!
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் சிறுவன் ஒருவன் ஒரு ராட்சத மலைப்பாம்புடன் ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் சிறுவன் ஒருவன் ஒரு ராட்சத மலைப்பாம்புடன் ஜாலியாக விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், ஒரு சிறுவன் பெரிய மலைப்பாம்புடன் விளையாடுவதைக் காணலாம். அது அவரைச் சுற்றி வளைக்கும்போது, அச்சமற்ற குழந்தை தனது தோள்களில் மலைப்பாம்புகளை சுமந்து செல்கிறார்.
இதையும் படிங்க: அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன், ரஷ்யா, பெலாரஸ் நாடுகளை மையப்படுத்தி அறிவிப்பு
சிறுவன் எந்த பயமும் இல்லாமல் அதனுடன் விளையாடுகிறான். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலானதை அடுத்து இந்த வீடியோ இதுவரை 300,000 பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 30 வயதிலேயே திடீர் மரணம்: WWE சூப்பர்ஸ்டார் மல்யுத்த வீராங்கனை சாரா லீ காலமானார்
இந்த செயல் எவ்வளவு ஆபத்தானது என்பதை வலியுறுத்திய நெட்டிசன்கள் பாம்புகள் விளையாடும் பொம்மைகள் அல்ல என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இது மிகவும் ஆபத்தானது, தயவுசெய்து இந்த ஆபத்தான ஊர்வனவற்றுடன் விளையாடுவதைத் தவிர்க்கவும் என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். இவ்வாறு பல்வேறு கமெண்டுகள் அந்த வீடியோவுக்கு வந்துக்கொண்டிருக்கிறது.