எகிப்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது, பயிற்சியாளர் ஒருவரை பார்வையாளர்கள் முன் சிங்கம் கடித்து குதறியசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியா பகுதியில் சர்க்கஸ் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு பார்வையாளர்கள் கூடிய நிலையில் சர்க்கஸ் தொடங்கியது.

அப்போது சாகச நிகழ்ச்சிக்காக ஷாகீன் என்ற பயிற்சி வீரர், சிங்கத்தின் கூண்டிற்குள் இருந்துள்ளார். அவர் அங்கிருந்த மூன்று சிங்கங்களையும் சாகசம் காட்டுவதற்காக தன் கையில் இருந்த குச்சியால் அடித்து மேஜை மீது அமர்த்த முயற்சி எடுத்தார். 3-வது சிங்கத்தை அங்கிருந்த ஏணியின் மீது ஏற வைத்துள்ளார்.

அப்போது மேஜை மீது உட்கார்ந்திருந்து சிங்கம் ஒன்று திடீரென்று அவரை நோக்கி பாய்ந்து தாக்‍கியது. இதனால் பதற்றமடைந்த மற்ற பயிற்சி வீரர்கள் சிங்கத்தை விரட்ட முற்பட்ட போதும், அவரை சிங்கம் பயங்கரமாக தாக்கியுள்ளது. அதன் பின்னர் சிங்கம் விரட்டப்பட்டு, அவரை உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.