நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து... 150 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 150 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Libya says 150 migrants feared dead

லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 150 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். Libya says 150 migrants feared dead

வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் அதிபர் கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போராளிக் குழுக்களின் மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களிடம் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக குடியேறி வருகின்றனர். Libya says 150 migrants feared dead

இந்நிலையில், லிபியாவின் அல் கோம்ஸ் நகரில் இருந்து இரண்டு படகுகளில் 300-க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பா நோக்கி பயணித்தனர். இவர்களுடைய படகுகள் தலைநகர் திரிப்போலியிலிருந்து கிழக்கில் 120 கி.மீ தொலைவில் மத்திய தரைகடல் பகுதியில் கொண்டிருந்தபோது திடீரென நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. Libya says 150 migrants feared dead

இதனால், படகில் பயணம் செய்த அனைவரும் தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் 150 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும், 150 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்தாண்டில் மட்டும் இதுவரை மத்திய தரைக்கடல் வழியாக பயணித்த அகதிகளில் 600 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. கூறியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios