தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி ரசுல்லா நிஜாமானி, பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல தாக்குதல்களை நடத்திய எல்.இ.டி. தொகுதியின் ஒரு பகுதியாக அவர் இருந்தார்.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் ( LeT ) முக்கிய தளபதியான ரசுல்லா நிஜாமானி என்ற காசி அபு சைஃபுல்லா என்றும் அழைக்கப்படுகிறார். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் மாட்லி பால்கரா சவுக் அருகே சுட்டுக் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் வட்டாரங்கள் கூறுகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல தாக்குதல்களை நடத்திய லஷ்கர் பயங்கரவாதக் குழுவின் அங்கமாக சைஃபுல்லா இருந்தார்.
சைஃபுல்லா லஷ்கர்-இ-தொய்பாவின் நேபாள குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஆட்சேர்ப்பு, நிதி, தளவாடங்களைத் திரட்டுதல், இந்திய-நேபாள எல்லையில் பயங்கரவாதச் செயல்களை எளிதாக்குதல் ஆகியவற்றில் முக்கிய நபராக செயல்பட்டவர். அவர் லஷ்கர்-இ-தொய்பாவின் அசாம் சீமா மற்றும் யாகூப் ஆகியோருடன் சேர்ந்து அவர் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் தாக்குதல்களைத் திட்டமிட்டவர்:
சைஃபுல்லா, வினோத் குமார் என்ற மாற்றுப்பெயரில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர் நேபாளத்தைச் சேர்ந்த நக்மா பானுவை மணந்தார் என்றும் சொல்லப்படுகிறது. 2006ஆம் ஆண்டு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத் தாக்குதல், 2001ஆம் ஆண்டு ராம்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாம் தாக்குதல் மற்றும் 2005ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் மூளையாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள பாடின், மாட்லியில் வசித்து வந்ததாகவும் , லஷ்கர்-இ-தொய்பா/ஜமாத்-உத்-தவாவுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் நிதி திரட்டுவதில் கவனம் செலுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
