திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த லெஸ்பியன் ஜோடிக்கு திருமண மண்டபம் தர மறுக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது .  பரந்து விரிந்த  வினோதங்கள் நிறைந்த உலகத்தில் ஆங்காங்கே  பல சுவாரசியமான சம்பவங்களும் நடந்து கொண்டே இருக்கிறது ,  பல நேரங்களில் அந்த சம்பவங்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி பலரின் கவனத்தையும் பெற்றுவிடுகிறது.  அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது .  தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த  லீ ஹீகீஸ் மற்றும்  மேகன் வால்டிங் என்பவர்கள் லெஸ்பியன் ஜோடி அவர் .  

இப்போதெல்லாம் ஓரின சேர்க்கையாளர்கள்  முறையாக திருமணம் செய்துகொண்டு தங்களுக்கென ஒரு தனி வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளும்  சம்பவங்கள் சகஜமாகி வருகிறது. அந்த வகையில் நீண்ட நாட்களாக லெஸ்பியனாக இருந்து  லீ ஹீகீஸ், வால்டிங் ஜோடி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர் .  இந்நிலையில் இருவரும் திருமண மண்டபத்திற்காக அதன் உரிமையாளரை அணுகி தங்களின் விருப்பத்தை கூறினார் ,  ஆனால் அந்த மண்டபத்தில் உரிமையாளர்,   இவர்கள் ஓர் பாலின எதிர்ப்பாளர்கள் என்று அறிந்தவுடன் ,  மண்டபம்  தரமுடியாது என மறுத்துவிட்டார்.   அதாவது ஒரினசேர்க்கை  திருமணம் கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது என்றும் , அவர் காரணம் கூறியதாக தெரிகிறது .  இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள லீ ஹீகீஸ்  நாங்களும் ஒரு குடும்பமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ,  திருமண மண்டபத்திற்கு அணுகியபோது நாங்கள் அங்கு மறுக்கப்பட்டோம் ,  நான் அதில் எந்த அளவுக்கு காயப்பட்டு இருக்கிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள் . 

எங்களைப் பற்றிய தவறான அனுமானங்களால் நான் எவ்வளவு வேதனை அடைந்து இருப்பேன். அடுத்த ஆண்டுக்குள் நாங்கள் விரும்பியபடி திருமண மண்டபம் கிடைக்கும் திருமணம் செய்வோம், என உறுதிபட தெரிவித்துள்ளார்.   இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்க மனித உரிமைகள் ஆணையம் அந்த திருமண மண்டபத்தில் உரிமையாளரை கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது .