வங்கதேசத்தில் தொடரும் அடக்குமுறை? இந்தியாவிற்குள் நுழைய நூற்றுக்கணக்கில் காத்திருக்கும் சிறுபான்மைியனர்
வங்கதேசத்தில் அசாதாரண சூழல் நிலவும் நிலையில், அந்நாட்டில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைவதற்காக நூற்றுக்கணக்கான சிறுபான்மையினர் எல்லையில் குவிந்து வருகின்றனர்.
வங்காளதேசத்தில் விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் சட்டத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டம் ஆளும் கட்சிக்கு எதிரானதாக மாறியது.
ஆயிரம் ரூபாய் அரசு; யார சந்தோசப்படுத்த கார் பந்தயம் நடத்துறீங்க? சீமான் கேள்வி
வன்முறைகள் தொடர்ந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த 3 மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்றும், இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பொறுப்பு வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் இடைக்கால பிரதமர் பதவி ஏற்றார்.
ரீல் லைப் மட்டும் இல்ல; ரியல் லைப்லயும் விவசாயம்னா ரொம்ப பிடிக்கும் - நடவு பணியில் சசிகுமார்
இந்நிலையில் வங்கதேசத்தில் சிறுபான்மையினராகக் கருதப்படும் இந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற புகைப்படங்கள், வீடியோகள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதனிடையே வங்கதேசத்தில் வன்முறையாளர்களின் அடக்குமுறையில் இருந்து தப்பிப்பற்காக இந்தயாவிற்குள் நுழையும் முனைப்பில் அந்நாட்டு எல்லையில் நூற்றுக்கண்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையினர் என்று கூறப்படுகிறது.