பெண்களுக்கு மிகவும் ஆபத்தான இடம் வெளியில் மட்டும் இல்ல..... இங்கேயும் தான்..! வெளியான அதிர்ச்சி தகவல்...!
பெண்களை போதைப்பொருளாக பார்க்கும் பழக்கம் இந்த சமூதாயத்தில் இன்றளவும் இருக்க தான் செய்கிறது... பாரதி கண்ட புதுமை பெண் என ஒரு பக்கம் தூக்கி வைத்து கொண்டாடினாலும், மற்றொரு பக்கம் பெண்களை இழிவாக பேசுவதும், கேவலமாக நடத்துவதும், மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் வேகமாக ஒரு பெண் பயணித்தாலும் ஒரு சில காம வெறியன்களால் சீரழிக்கப்படுவதை கண்கூடாக தெரிந்துக்கொள்ள முடிகிறது..

அதுமட்டுமா.... தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு செய்து அவர்களை கொலை செய்து விடுவதுமாக பெண்களுக்கு பெரும் ஆபத்து வெளியில் மட்டும் தான் இருக்கிறது என்று பார்த்தால் தற்போது வெளியாகி இருக்கும் ஐ.நா புள்ளிவிவரம் மேலும் ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்து உள்ளது.
அதாவது, பெண்களுக்கு தங்கள் வீடே மிகவும் ஆபத்தான இடம் என்று ஐ.நா ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புள்ளி விபரத்தை ஐ.நாவின் போதைப் பொருள் மற்றும் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டில் கொல்லப்பட்ட பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் கணவன் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளதால், அவர்களது வீடே பெண்களுக்கு மிக ஆபத்தான இடம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதுநாள் வரை பெண்களுக்கு வெளியில் தான் ஆபத்து என்று நாம் பொதுவான கருத்தை முன் வைப்போம்.. ஆனால் வரதட்சணைக்காகவும், கள்ளக்காதலுக்காகவும், கருத்து வேறுபாடு, சொத்து பிரச்சனை... குடும்ப தகராறு இவ்வளவு ஏன் காப்பீடு செய்து வைத்துவிட்டு பணத்திற்காக குடும்ப உறுப்பினர்களே பெண்ணை கொலை செய்யும் கோர சம்பவமும் இதே சமூகத்தில் நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே...
இந்த நிலையில் தான் பெண்களுக்கு தங்கள் வீடே மிகவும் ஆபத்தான இடம் என்று இதுதொடர்பான புள்ளி விபரத்தை ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றப்பிரிவு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.