சிங்கப்பூரில வச்சு என்னை போட்டுருவாங்க !! வட கொரிய அதிபர் கிம் அச்சம் !! ஏன் தெரியுமா ?
ஜுன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் மொனாட் டிரம்ப்பும், வட கொரிய அதிபர் கிம்மும் சந்திக்கும்போது தான் செல்லப்படலாம் என கிம் அச்சத்துடன் இருப்பதாக தகவல்கள் வெளியுகியுள்ளன.
அணு ஆயுத சோதனை, ஆயுத குவிப்பு என உலக நாட்டாமை அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்பவர் வட கொரி அதிபர் கிம். அமெரிக்க போன்ற நாடுகளின் மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சப் போவதில்லை என டிரம்ப்புக்கு அவர் சவால் விடுத்து வருகிறார்.
இந்நிலையில் சிங்கப்பூரில் வருகின்ற ஜூன் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகிய இருவரும் சந்திக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடக்க இருக்கிறது.
பல்வேறு தடைகளுக்குப் பின் நடக்க இருக்கும் இந்த சந்திப்பின் போது தான் கொல்லப்படலாம் என வடகொரிய அதிபர் பயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது கடந்த ஞாயிறன்று கிம் தனது தலைமை தளபதிகள் மூன்று பேரை அதிரடியாக மாற்றி தனக்கு நம்பிக்கையானவர்களை பணியில் அமர்த்தியிருப்பதன் மூலம் உறுதிப்படுத்த படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் நடக்கவிருப்பதால் சந்திப்பு நிகழும் முன் கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்கவிருக்கிறார்கள்.
அமெரிக்கா அல்லது அவரது எதிரி நாடுகள் தன்னை உயிருடன் விட்டு வைக்காது என நம்பும் கிம் கூட்டணி நாடான சீனாவும் கூட தன்னைக் கொல்ல நினைப்பதாக சில நம்பிக்கையான இடங்களில் இருந்து அவருக்கு தகவல் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
சீனா கடந்த வருடம் கிம் ஜாங் உன்னை படுகொலை செய்துவிட்டு அவரது சகோதரரன கிம் ஜாங் நம் மை வடகொரிய அதிபராக்க முயற்சித்தது. ஆனால் தவறுதலாக கிம் ஜாங் நம் அதில் பரிதாபமாக படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்தார். மலேசியா விமான நிலையத்தில் இந்த படுகொலை நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பின் கிம் பயப்பட ஆரம்பித்திருக்கிறார். மேலும் சிங்கப்பூர் என்பது மலேசியாவின் அண்டை நாடு என்பதால் தான் படுகொலை செய்யப்படுவோம் என்கிற பயம் அவருக்கு அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுமட்டும் இன்றி தென்கொரியாவிலும் ஒரு சில நபர்கள் வடகொரியா அதிபரை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பதாகவும் அவருக்கு வந்த செய்தி அவரது உயிர் பயத்தை அதிகரித்திருக்கிறது.