கனடா மண்ணில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய முகவர்கள் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கடந்த ஆண்டு ட்ரூடோ கூறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவுகளில் பெரும் விரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்தியாவும், கனடாவும் இந்த விஷயத்தில்பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தியா நேற்று ஆறு கனடா தூதர்களை வெளியேற்றிய மறுநாளில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செவ்வாயன்று, ''கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் இந்தியா ஒத்துழைக்கவில்லை என்றும், புது டெல்லியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட "ஆதாரங்கள் மற்றும் தகவல்களின் நம்பகத்தன்மை மற்றும் தீவிரத்தை அங்கீகரிக்குமாறு" வலியுறுத்தினார். 

ஜஸ்டின் ட்ரூடோவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ''வெளிநாடுகளில் நீதிமன்றத்திற்கு வெளியே நடத்தப்படும் நடவடிக்கைகள் குறித்த அதன் நிலைப்பாடு இனிமேல் சர்வதேச சட்டத்துடன் தெளிவாக இணைந்திருக்கும் என்பதை உறுதியாக மீண்டும் வலியுறுத்துகிறேன்'' என்று கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்கள் 2024: தேர்தல் ஆணையம் இன்று முக்கிய தேதிகளை அறிவிக்க உள்ளது

Scroll to load tweet…

கனடா மண்ணில் சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டதில் இந்திய முகவர்கள் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கடந்த ஆண்டு ட்ரூடோ கூறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர மோதல்கள் விரிவடைந்து வருகின்றன. 

“கனடா என்பது சட்டத்தின் ஆட்சியில் வேரூன்றிய நாடு, மேலும் எங்கள் குடிமக்களை பாதுகாப்பது மிக முக்கியமானது. அதனால்தான், இந்திய அரசாங்க முகவர்கள் கனடா மண்ணில் கனடா குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்வதில் நேரடியாக ஈடுபட்டிருப்பதாக எங்கள் சட்ட அமலாக்க மற்றும் உளவுத்துறை சேவைகள் நம்பின. நாங்கள் பதிலளித்தோம்,” என்றும் ஜஸ்டின் ட்ரூடோதெரிவித்துள்ளார்.

“இந்திய அரசிடம் எங்கள் கவலைகளைப் பகிர்ந்து கொண்டோம், மேலும் இந்த முக்கியமான பிரச்சினையில் வெளிச்சம் போட எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டோம். அதே நேரத்தில், கனடா வாழ் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்க காவல்துறை மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் வசம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தியுள்ளன. இன்று, ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில், கனடா நாட்டு குடிமக்களை பாதுகாக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

திங்கட்கிழமை மாலை, ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் ஆணையர் மைக் டுஹெம் கூறியதாவது: “இந்திய அரசாங்க முகவர்கள் பொதுப் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்பதற்கும் எங்களிடம் தெளிவான மற்றும் வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதில் ரகசிய தகவல் சேகரிப்பு நுட்பங்கள், தெற்காசிய கனடா வாழ் குடிமக்களை குறிவைக்கும் வற்புறுத்தல் நடத்தை மற்றும் கொலை உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட அச்சுறுத்தல் மற்றும் வன்முறை செயல்களில் ஈடுபடுவது ஆகியவை அடங்கும். இது ஏற்றுக்கொள்ள முடியாதது.”

ஞாயிற்றுக்கிழமை கனடா அதிகாரிகள் ஒரு அசாதாரண நடவடிக்கையை இந்திய அதிகாரிகளைச் சந்தித்து ஆதாரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், இந்திய அரசாங்கத்தின் ஆறு முகவர்கள் குற்றவியல் நடவடிக்கைகளில் ஆர்வமுள்ள நபர்கள் என்ற முடிவுக்கு வந்ததாகவும் ட்ரூடோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழை: பள்ளிகள், கல்லூரிகள் மூடல்; ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தல்

“நான் தெளிவாகக் கூறுகிறேன் போலீசார் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது. இது ஒரு முடிவுக்கு வழிவகுக்கிறது. கனடா மண்ணில் கனடா குடிமக்களை அச்சுறுத்துவதிலும் கொல்வதிலும் ஒரு வெளிநாட்டு அரசாங்கம் ஈடுபடுவதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் - இது கனடாவின் இறையாண்மை மற்றும் சர்வதேச சட்டத்தின் மீதான ஆழமாக ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்'' என்று கூறியுள்ளார்.