Asianet News TamilAsianet News Tamil

நாஃப்கினுக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் இளம் பெண்கள்…. வறுமையில் வாடும் கொடுமை !!

கென்யாவில் வறுமையில் வாடும் பெண்கள் தங்களுடைய மாதவிடாய் காலத்தின்போது நாஃப்கினுக்காக லாரி மற்றும் ஆட்டோ டிரைவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 

kenyanladies doing prospitution  for Napkin
Author
Kenya, First Published Sep 22, 2018, 8:23 PM IST

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் யுனிசெப் ஆய்வு மேற்கொண்டதில், வறுமையில் இருக்கும் 65 சதவீத பெண்கள் நாப்கினிக்காக ஆண்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர். ஏனெனில் அவர்களிடம் சாணிட்டரி நாப்கின் வாங்குவதற்கு போதுமான வருமானம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு வறுமை நிலவுவதால் பெண்கள் மிகச்சாதாரணமாக விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

kenyanladies doing prospitution  for Napkin

கென்யாவில் இருக்கும்  பெண்கள் இரண்டு காரணங்களுக்காக ஆடடோ  ஓட்டுனர்கள், டாக்ஸி ஓட்டனர்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர். ஒன்று அவர்களின் வறுமை, மற்றொன்று அவர்களிடம் சானிட்டரி வாங்குவதற்கு கூட பணம் இல்லாதது. அதுமட்டுமின்றி இங்கிருக்கும் பெரும்பாலான கிராமங்களில் சானிட்டரி அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை, வெளியூருக்கு சென்று வாங்குவதற்கு என்றால், அந்தளவிற்கு போக்குவரத்து வசதியில்லை.

kenyanladies doing prospitution  for Napkin

எப்படியாவது வெளியூருக்கு சென்று சானிட்டரி வாங்கிவிடலாம் என்று நினைத்தால், அவர்கள் பேருந்தில் சென்று திரும்புவதற்கு போதுமான பணமும் இருப்பதில்லை.இதன் காரணமாகவே அவர்கள் அந்த வழியில் வரும் லாரி ஓட்டுனர்கள் போன்றவர்களிடம் சானிட்டரி வாங்கிக் கொண்டு அவர்களிடம் உறவு வைத்துக் கொள்கின்றனர்.

பொதுவாக கென்யாவில் இருக்கும் பெண்களுக்கு முதல் மாதவிடாய் வந்துவிட்டால், அவர்கள் திருமணத்திற்கு தயராகிவிட்டதாக எண்ணுவதாகவும் கூறப்படுகிறது. மாதவிடாய் காலத்தின் போது சிறுமிகள் பள்ளிக்கும் செல்வதில்லை, காரணம் பள்ளியில் போதுமான பாதுகாப்பு இருக்காது, கழிவறையும் சுத்தமாக இருக்காது.

kenyanladies doing prospitution  for Napkin

இதனால் அவர்கள் வீட்டிலே இருந்துவிடுகின்றனர். இந்நிலையில் கென்ய அரசாங்கமும், யுனிசெப்பும் சேர்ந்து 335 பள்ளிகளில் இந்த சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதற்கு வழி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பிரச்சனையை தவிர்ப்பதற்கு கென்யா அரசு அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios