கஜகஸ்தானில் பயங்கரம்... 100 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்து..!
கஜகஸ்தான் நாட்டின் அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது. அதில் 95 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 100 பேர் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் இருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தால் விமானம் முற்றிலுமாக நொறுங்கியது.
கஜகஸ்தானில் 100 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த 100 பேரின் நிலைமை என்ன என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
கஜகஸ்தான் நாட்டின் அலமட்டி நகரில் இருந்து, நூர்சுல்தான் நகருக்கு பெக் ஏர் பயணிகள் விமானம் இன்று காலை புறப்பட்டது. அதில் 95 பயணிகள், 5 ஊழியர்கள் என மொத்தம் 100 பேர் பயணித்தனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் அருகில் இருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த விபத்தால் விமானம் முற்றிலுமாக நொறுங்கியது.
இந்த விபத்தில் முதற்கட்டமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விமான பயணிகள் பலர் உயிருடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக உடனே மீட்புக்குழுவினர் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் விமான நிலையத்தில் இருந்து விமானம் டேக்ஆப் ஆனபோது போதிய உயரத்திற்கு எழும்பாததால், கான்கிரீட் வேலியில் மோதி பின்னர் அதனை ஒட்டியுள்ள 2 மாடி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.