பாகிஸ்தான் கழுத்தின் ரத்தக் குழாய் மாதிரி காஷ்மீர்... எங்களை சீண்டினால் சும்மாவிட மாட்டோம்... கொக்கரிக்கும் இம்ரான் கான்..!
ஒரு மனிதனின் இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்து ரத்தக் குழாய் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தான் பாகிஸ்தானின் கழுத்து ரத்தக் குழாயாக காஷ்மீர் மாநிலம் இருக்கிறது.
பாகிஸ்தானுக்கு காஷ்மீர் கழுத்தில் உள்ள ரத்தக்குழாயை போன்றது, இதை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என இம்ரான் கான் கூறி உள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு நீக்கியது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து, பாகிஸ்தான், இந்தியா உடனான தூதரக மற்றும் வர்த்தக உறவை துண்டித்துக் கொண்டது. மேலும், தூதரக ரீதியாக ஐநா மற்றும் உலக நாடுகளின் கவனத்திற்கு காஷ்மீர் விவகாரத்தை கொண்டு பாகிஸ்தான் செல்ல முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவுடன் கடந்த 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் உயிரிழந்த பாகிஸ்தான் வீரா்களின் நினைவாக அந்நாடு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 6-ஆம் தேதியை பாதுகாப்பு மற்றும் தியாகிகள் தினமாக அனுசரித்து வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தான் மக்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இம்ரான் கான் பேசுகையில், ஒரு மனிதனின் இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் கழுத்து ரத்தக் குழாய் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் தான் பாகிஸ்தானின் கழுத்து ரத்தக் குழாயாக காஷ்மீர் மாநிலம் இருக்கிறது.
அதன் சிறப்பு அந்தஸ்தை நீக்குவது என்பது பாகிஸ்தானின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் விடுக்கப்பட்டுள்ள சவாலாகவே கருதப்படுகிறது. எனவே, இந்தியாவின் அணு ஆயுத குவிப்பை சர்வதேச சமூகம் தீவிரமாக கவனிக்க வேண்டும். தவறினால், அதனால் ஏற்படும் பேரழிவுக்கு உலக சமூகமே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
ஒருபோதும் பாகிஸ்தான் போரை தொடங்காது என ஏற்கனவே நாங்கள் அறிவித்து விட்டோம். அதேசமயம், எங்களின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் சவால் விடுக்கப்பட்டால் அமைதியாக இருக்க மாட்டோம் என்பதையும் மறக்கக் கூடாது என இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.