அமெரிக்காவில் ஓயாத துப்பாக்கி கலாச்சாரம்! வீட்டில் சடலமாகக் கிடந்த இந்தியக் குடும்பம்!
யோகேஷ் மற்றும் பிரதிபா இருவரும் திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்கள் இத்தகைய முடிவு எடுத்ததற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை என்றும் யோகேஷின் உறவினர் எம்.ஆர்.சந்தோஷ் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள டவ்சன் இல்லத்தில் வெளிநாடுவாழ் இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலமாகக் கிடந்ததாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கர்நாடகாவின் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள ஹலேகல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
37 வயதான யோகேஷ் ஹொன்னாலா தனது மனைவி பிரதிபா மற்றும் அவர்களது ஆறு வயது மகன் யாஷ் ஆகியோரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று பால்டிமோர் கவுண்டி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஆண்டனி ஷெல்டன் கூறியுள்ளார்.
ஒவ்வொருவரின் உடலிலும் வெளிப்படையான துப்பாக்கிச்சூடு காயம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இருப்பினும் யோகேஷ் தற்கொலைக்கு முன், தனது மனைவி மற்றும் குழந்தையைக் கொன்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என ஷெல்டன் சொல்கிறார்.
சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் சிறிய மாற்றம்: இஸ்ரோ தகவல்
"மூவரும் தற்கொலை செய்து கொண்டதாக பால்டிமோர் போலீஸில் இருந்து எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இறப்புக்கான காரணத்தை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த வாரம்தான் எனது மகன் மற்றும் மருமகளிடம் பேசினேன்" என்று யோகேஷின் தாய் ஷோபா தெரிவிக்கிறார்.
யோகேஷின் குடும்பத்தினர், இறந்தவரின் சடலத்தை மீட்டுத்தர உதவுமாறு இந்திய அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளனர். குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தாவணகெரேவில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி உறுதி அளித்துள்ளார்.
யோகேஷ் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தார். அவரும் அவரது மனைவியும் அங்கு சாப்ட்வேர் இன்ஜினியர்களாக பணியாற்றி வருவதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். யோகேஷ் மற்றும் பிரதிபா இருவரும் திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்கள் இத்தகைய முடிவு எடுத்ததற்கான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை என்றும் யோகேஷின் உறவினர் எம்.ஆர்.சந்தோஷ் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
"உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவர துணை கமிஷனர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை அணுகியுள்ளோம். உதவிக்கு வெளியுறவு அமைச்சகத்தை அணுகுவதாக அவர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர்" என்றும் சந்தோஷ் சொல்கிறார்.
ரஷ்யாவின் கனவு தகர்ந்தது! லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது!