மனிதர்களுக்கு போட்டியாக கால்பந்து விளையாடும் கங்காரு
கான்பெரா: மனிதர்களுக்கு ஈடாக கால்பந்து விளையாடும் கங்காரு. ஆஸ்திரேலியா தலைநகர் கான்பெராவில் நேற்று பெண்களுக்கான கால்பந்து பிரீமியர் லீக் போட்டி நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மைதானத்துக்குள் கங்காரு நுழைந்தது.
அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். மைதானத்தில் கங்காரு குதித்து குதித்து சுற்றி வந்தது. பின்னர் கங்காருவிடம் பந்தை எறிந்தனர்.
கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது. அதன் பின் மைதானத்தை சுற்றி வந்தது. இதனால் போட்டி 20 நிமிடம் தடைப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கங்காருவை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். கங்காரு சிறிது விளையாடி கண்ட அனைவரும் வியப்படைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.