Asianet News TamilAsianet News Tamil

சிங்கப்பூரர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. ஜூரோங்கில் புது பேருந்து நிறுத்தம் - தெங்கா செல்ல புதிய பேருந்து சேவை!

Singapore News : வென்ச்சர் டிரைவில் அமைந்துள்ள புதிய ஜூரோங் டவுன் ஹால் பஸ் இன்டர்சேஞ்ச் வருகின்ற நவம்பர் 26 அன்று புதிய பஸ் சேவையுடன் திறக்கப்படும் என்று சிங்கப்பூரின் தரைவழி போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

Jurong Bus Hall Interchange opens soon new bus service for Tengah ans
Author
First Published Nov 4, 2023, 9:05 AM IST | Last Updated Nov 4, 2023, 9:05 AM IST

இந்த புதிய பேருந்து பரிமாற்றமானது ஜூரோங் ஈஸ்ட் MRT நிலையம் மற்றும் ஜூரோங் கிழக்கு பேருந்து இடைமாற்றம் ஆகியவற்றிற்கு துணைபுரியும் மற்றும் அப்பகுதியில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு கூடுதல் பேருந்து வசதியை இது வழங்கும். மேலும் இங்கிருந்து தெங்கா பகுதிக்கு செல்ல புதிய பேருந்து சேவை ஒன்றும் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் பஸ் ஏறும் இடத்தில் இருக்கைகள் 

ஜூரோங் டவுன் ஹால் பஸ் இன்டர்சேஞ்சில், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பிற உடல் ரீதியான சவால்கள் உள்ள குடும்பங்களுக்கு உதவக்கூடிய வகையில் இந்த பகுதிகளில் இருக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று LTA மேலும் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் நுழைவாயில்களில் தடுப்பு வாயில் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ளது. 

Singapore Life | மகிழ்ச்சியில்லாத பணக்கார நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் பணக்காரர்கள் முதலிடம்!

கூடுதல் வசதிகள் 

மேலும் இந்த இடங்களில் சக்கர நாற்காலியில் செல்லக்கூடிய கழிப்பறைகள் மற்றும் உடை மாற்றுவதற்கான அறைகள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும் அமைதியான இடம் உள்ளிட்டவை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கும் இந்த இடம் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த இந்த வசதிகள் டச்லெஸ் சென்சார்களால் இயக்கப்படும் ஆட்டோ-ஸ்லைடிங் கதவுகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தை பராமரிப்பு மற்றும் சக்கர நாற்காலியை அணுகக்கூடிய அறைகளில் கதவுகள் திறக்கும்போதும் மூடும்போதும் எச்சரிக்கை செய்ய ஆடியோ குறிப்புகள் உள்ளன என்பதும் இதன் சிறப்பு அம்சமாகும்.

மீண்டும் தீ விபத்து.. மின்சாத பொருட்களால் சிங்கப்பூரில் ஏற்படும் தொடர் அவலம் - இருவர் மருத்துவமனையில் அனுமதி!

மேலும் கூடுதலாக, இந்த புதிய பேருந்து பரிமாற்றம், ஜூரோங் கிழக்கு MRT நிலையம் மற்றும் ஜூரோங் கிழக்கு பேருந்து பரிமாற்றம் ஆகியவற்றுடன் இணைப்புவழிகள் மற்றும் லிஃப்ட் பொருத்தப்பட்ட ஒரு பாதசாரி மேல்நிலைப் பாலம் மூலம் இணைக்கப்படும். அந்த இணைப்பு வழிகளும் மழை நேரத்தில் மக்கள் சிரமம் இல்லாமல் செல்ல மேற்குறையுடன் அமைக்கப்படும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios