தென்னாப்பிரிக்காவில் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 63 பேர் உடல் கருகி உயிரிழப்பு!!
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்தனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னஸ்பர்க்கில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 63 பேர் உயிரிழந்து, 43 பேர் காயமடைந்ததாக அவசரகால மேலாண்மை சேவை தெரிவித்துள்ளது. அந்த நாட்டில் இருந்து வெளிவரும் பத்திரிக்கைகளும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளன.
பெருமளவில் தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும், மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசரகால சேவை அதிகாரி ராபர்ட் முலாட்ஸி கூறுகையில், ''இந்தக் கட்டிடத்தில் சட்டத்திற்கு மாறாக குடியேறி உள்ளனர். வீடு இல்லாதவர்கள் எந்த முறையான குத்தகை ஒப்பந்தங்களும் இல்லாமல் இங்கு குடியேறி உள்ளனர். இதுதான் இறந்தவர்களின் உடலை தேடுவதிலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டரே பொறாமைப்படும்.. உலகின் மிகச்சிறந்த இந்த கையெழுத்து யாருடையது தெரியுமா?
அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் கையில் அதிர்ஷ்டம் அளிக்கும் தங்கநிற அன்னாசிப் பழம்!
இந்தக் குடியேற்றத்தில் சுமார் 200க்கும் அதிகமானவர்கள் வரை வசித்து வந்து இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேதத்தின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை. மற்ற ஆப்ரிக்க நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்தவர்கள் இந்தக் கட்டிடத்தில் வசித்து வந்ததாக தெரிய வந்துள்ளது.