அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் கையில் அதிர்ஷ்டம் அளிக்கும் தங்கநிற அன்னாசிப் பழம்!
சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் அவர்களுக்கு, மரீன் பரேட் செண்ட்ரல் பகுதி ஓட்டர் உரிமையாளர்கள் சார்பில் அதிர்ஷ்டம் தரும் தங்க நிற அன்னாச்சிப் பழம் வழங்கப்பட்டது.
தற்போதைய சிங்கப்பூர் அதிபர் Halimah binti Yacob பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறுகிறது.
பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அதிபர் தேர்தல் வேட்பாளர் தர்மன் சண்முகரத்னம் ஆகஸ்ட் 30ம் தேதி மரீன் பரேட் செண்ட்ரல் சந்தை, உணவங்காடி நிலையத்தில் பொது மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
அப்போது, அவரது ஆதரவாளர்கள் பல் அங்குத் திரண்டனர். அவர்களில் ஒருவர் 'Lexus Durian King' என்ற கடையின் இணை உரிமையாளர் ஸ்டெல்லா (Stella), அதிபர் வேட்பாளர் தர்மனுக்கும் அவரது மனைவிக்கும் அழகான பரிசு ஒன்றை வழங்கினார். அது, கண்ணைக் கவரும் இரண்டு அழகான 'தங்க' நிற அன்னாசிப் பழங்கள் தான் அவை!
அப்பழங்கள், உண்பதற்காக அல்ல என்றும், அன்னாசிப் பழத்தின் தோற்றம் கொண்ட அந்தக் கண்ணாடிப் பொருளுக்குள் 'தங்க' நிறத்தில் செய்யப்பட்ட சின்னஞ்சிறு தாள்கள் காணப்படுகிறது.
சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் நாளன்று பொது விடுமுறை! - மனித வளத்துறை அமைச்சகம் அறிவிப்பு!
அந்த அன்னாச்சி பழத்தில் தண்ணீரும் ஊற்றப்பட்டிருந்தது. தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தவகல் வெளியானதும், அவருக்காக இந்த தங்க நிற அன்னாச்சி பழத்தை ஏற்பாடு செய்ததாக ஸ்டெல்லா கூறியுள்ளார்.
இந்த அன்னாசிப் பழம் அவருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் எனும் நம்பிக்கையில் அவற்றை கொடுத்ததாகவும் ஸ்டால்லா தெரிவித்தார்.