இஸ்ரேல் குழந்தைகள் தலை துண்டிப்பை உறுதி செய்த ஜோ பைடன்; தரை வழி தாக்குதலுக்கு தயாராகும் டெல் அவிவ்!!

ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் குழந்தைகளின் தலையை துண்டித்ததை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து இஸ்ரேலுக்கு மேலும் போர் ஜெட் விமானங்கள் அனுப்பப்படும் என்று பைடன் தெரிவித்துள்ளார்.
 

Joe Biden confirms the beheading of Israeli babies; sending more fighter jets to the Middle East

இஸ்ரேல் மீது கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தீவிரவாதிகள் ஐயாயிரம் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் நிலைகுலைந்த இஸ்ரேல், சுதாரித்துக் கொண்டு பதிலடி தாக்குதல் துவக்கியது. பெண்கள், குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகளை சும்மா விட மாட்டோம். காசா முற்றிலும் அழிக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்து இருந்தார். 

இவரைத் தொடர்ந்து பேசி இருந்த இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரும், ''காசா மீண்டும் பழைய காசாவாக இருக்காது. காசாவை இல்லாமல் செய்வோம், ஹமாஸ் தீவிரவாதிகள் கூண்டோடு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்தது போல் அழிப்போம்'' என்று தெரிவித்து இருந்தார். மேலும், நாங்கள் போர் குற்றங்கள் அனைத்தையும் மீறி செயல்பட இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

ஆபரேஷன் அஜய்: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை அழைத்துவரும் பணியைத் தொடங்கிய வெளியுறவுத்துறை

இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், இஸ்ரேல் குழந்தைகளின் தலையை துண்டித்து  ஹமாஸ் தீவிரவாதிகள் கொன்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாட்டிற்கு மேலும் ஜெட் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்புகிறது. இன்று காசா நகருக்குள் 5,30,000 வீரர்கள் நுழைவார்கள் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் கூறுகையில், ''இந்த உலகம் எவ்வாறு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அழித்ததோ, அதேபோல் ஹமாஸ் தீவிரவாதிகளையும் நாங்கள் அழிப்போம்'' என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளை பாஸ்பரஸ் வெடிகுண்டு தாக்குதல்:
காசா மீது வெள்ளை பாஸ்பரஸ் ஆயுதங்கள் கொண்டு பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐநா தடை செய்த வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்தியதாக பாலஸ்தீனம் குற்றம்சாட்டியுள்ளது. காஸாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இஸ்ரேல் கொடிய குண்டுகளை பயன்படுத்துவதாக தங்களது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகமான எக்ஸ் மூலம் இஸ்ரேலுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டை பாலஸ்தீன வெளிவிவகார அமைச்சகம் முன்வைத்துள்ளது. 

குழந்தைகளையும் விடாது.. உடனே போரை நிறுத்துங்கள் -மலாலா வேண்டுகோள்!

வெடிகுண்டு வீசப்பட்ட படங்களும் வெளியாகி உள்ளன. வெள்ளை பாஸ்பரஸ் குண்டு சுற்றுப்புற காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​​​அதிக பிரகாசத்துடன் விரைவாக எரிந்து, அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது. பாஸ்பரஸ் வெடிகுண்டு வெடிக்கும் போது, ​​815 டிகிரி செல்சியஸ் வெப்பம் ரசாயன எதிர்வினை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. வெள்ளைப் புகையும் உருவாகும். பாஸ்பரஸ் குண்டைப் பயன்படுத்துவது போர்க் குற்றமாக கருதப்படும். உக்ரைனில் மீதும் பாஸ்பரஸ் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்து இருந்தது. 

வெள்ளை பாஸ்பரஸ் என்பது வெள்ளை பாஸ்பரஸ் மற்றும் ரப்பர் ஆகியவற்றின் மெழுகு கலவையாகும். இது 800 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் எரிகிறது. 1,300 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடைகிறது. ஆக்ஸிஜனுடன் தொடர்பு கொள்ளும்போது அடர்த்தியான வெள்ளை புகை உருவாகிறது. இது ஒரு மெழுகுப் பொருள். தோலுடன் வெள்ளை பாஸ்பரஸ் தொடர்பு கொண்டால், கடுமையான காயம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.

காசா, இஸ்ரேல் அதிகரிக்கும் உயிரிழப்பு:
இதற்கிடையில், இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரு தரப்பிலும் 2,300 ஐ தாண்டியுள்ளது. காசாவுக்கான எரிபொருள் மற்றும் தண்ணீர் விநியோகத்தை இஸ்ரேல் முற்றிலுமாக துண்டித்துள்ளது. இதனால் காஸாவில் உள்ள மின் நிலையம் மூடப்பட்டது. ஆனால் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், காசா மக்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை அனுமதிக்குமாறு இஸ்ரேலுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். காசாவில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான வழித்தடம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் எகிப்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

காசாவில் தரை வழித்தாக்குதல்:

காசா பகுதியில் இருக்கும் சுரங்கங்களை கண்டறிந்து அழிக்கும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளது. காசாவுக்கு அளித்து வந்த அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. உணவு, குடிநீரின்றி மக்கள் தவித்து வருகின்றனர். இதுவரை காசாவில் இருந்து மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர். இதுவரை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மட்டுமே நடத்தி வருகிறது. இனி தரை வழி தாக்குதல்களை துவக்கும் என்று தெரிய வந்துள்ளது. இது இன்னும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. இதைத்தான் அமெரிக்க அதிபர் பைடனும் உறுதிபடுத்தியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios