அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தி ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபராகிறார்.

உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவு வெளியாகிவிட்டது.. அமெரிக்காவில் 270 என்ற தேர்வாளர் வாக்குகளைப் பெறுபவரே அமெரிக்க அதிபராக முடியும். 

அந்தவகையில், 273 வாக்குகளை பெற்ற ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அபார வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அதிபரும் குடியரசுக்கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் 214 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.