ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்... ஜோ பைடன் டிவீட்!!
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஈராக் போரின் போது உருவானதாகக் கருதப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, 2004 ஆம் ஆண்டு முதல் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கைப்பற்றி அங்கு கலிஃபா ஆட்சியை நிறுவி, அதை சிரியா முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்படுவதாக அறியப்பட்டுவந்தது.
அல்கொய்தா அமைப்பின் தலைவரான பின் லேடனை கொன்று வீழ்த்திய பிறகு, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அமெரிக்காவால் குறிவைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷியை போர்க்களத்தில் இருந்து அகற்றியுள்ளோம் என்று கூறியுள்ளார்.