Shinzo Abe : ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு - சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்!
ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு! காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜப்பான் நாரா நகரில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். காயமடைந்த ஷின்சோ அபே-வை மீட்ட போலீசார், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். எனினும் சகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர் குறித்து ஜப்பான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேடையில் நின்று பேசிக் கொண்டு இருக்கும்போது அவருக்கு பின்னர் இருந்து வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். அவரை உடனடியாக ஆம்புலன்சில் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இருதயத்தில் அடிபட்டு இருக்கலாம் என்றும், ஷின்சோ அபேவுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. குண்டு பாய்ந்ததில் அவரது இருதயம் செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜப்பானில் நாரா என்ற இடத்தில் அந்த நாட்டின் நேரத்தின்படி காலை 11.30 மணிக்கு முன்னாள் பிரதமர் ஷின்சோ பேசிக் கொண்டு இருந்தார். அப்போது ஷின்சோ அபே-வுக்கு பின்புறம் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
யார் இந்த ஜப்பான் அரசியல்வாதி ஷின்சோ அபே?
இவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அவரது நிலைமை தற்போது தெரிய வரவில்லை என்று அந்த நாட்டின் அமைச்சர் ஹிரோகாசு மட்சுனோ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் நாட்டில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தாவர் என்ற பெயர் ஷின்சோ அபே-வுக்கு உண்டு. 2006 ஆண் ஆண்டில் பிரதமர் ஆனவர் ஓராண்டு மட்டுமே ஆட்சியில் நீடித்தார். பின்னர் 2012 முதல் 2020 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பிரதமராக நீடித்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாகவே அப்போது ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்து இருந்தார்.
நாரா பகுதிக்கான மேலவை தேர்தல் வரும் ஞாயிறு அண்டு நடக்கவிருந்த நிலையில் அதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த அபே சுடப்பட்டுள்ளார். ஜப்பானில் இதுபோன்ற சம்பவம் முதல் முறையாக நடந்து இருக்கிறது என்று அந்த நாட்டின் அரசியல்வாதிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். அரசியல் ரீதியாக அபே பழிவாங்கப்பட்டாரா போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. 67 வயதாகும் அபே ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். நாடுகள் இடையே நல்ல உறவை பேணிக் காத்து வந்தார். ஜப்பான் நாட்டில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கு கடுமையான விதிகள் உள்ளன.
பிரதமர் மோடி வருத்தம்:
ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தி இருப்பதற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். ''எனது இனிய நண்பர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருக்கும் செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறுகிறேன்'' என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
மன்மோகன் சிங்:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார். எனது நண்பர் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு இந்த நேரத்தில் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல், ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஜப்பான் முன்னாள் பிரதமர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.