யார் இந்த ஜப்பான் அரசியல்வாதி ஷின்சோ அபே?
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது இன்று காலை மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
ஜப்பான் நாட்டு பிரதமராக இருந்த ஷின்சோ அபே, தெற்கு ஜப்பானின் நாகதோ நகரில் பிறந்தார். தலைநகர் டோக்கியோவுக்கு அருகேயுள்ள செய்கெய் பல்கலைக்கழகத்தில் 1977ம் ஆண்டு சேர்ந்து அரசியல் படிப்பை முடித்தார். பின்னர், மேல் படிப்புக்காக ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று தெற்கு கலிஃபோரினியா பல்கலைக்கழகத்தில் இணைந்தார். உயர் கல்வியை முடித்த ஷின்சோ அபே, 1979ம் ஆண்டு உருக்க ஆலை ஒன்றில் பணியாற்றினார். 1982ம் ஆண்டு பணியிலிருந்து விலகிய ஷின்சோ அபே, பின்னர் அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
1993ம் ஆண்டு முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்ட ஷின்சோ அபே, லிபெரல் டிமாக்ரட்டிக் கட்சியின் சிறுசிறு பதிவிகளில் வகித்து வந்தார். பின்னர், 2005ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அவர், அமைச்சரவை தலைமைச் செயளாலராக அப்போதைய பிரதமரால் நியமிக்கப்பட்டார்.
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கிச்சூடு- கவலைக்கிடமா? மக்கள் அதிர்ச்சி !
பின்னர் 2006ம் ஆண்டு நடைபெற்ற பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற ஷின்சோ அபே, ஜப்பான் நாட்டின் 90வது பிரதமராகவும், முதல் இளம் வயது பிரதமராகவும் பதவியேற்றார். பின்னர், மீண்டும் முதல் 2020 ம் ஆண்டு வரையிலாக 2வது முறையாக பிரதமர் பதவி வகித்த ஷின்சோ அபே, ஜப்பான் நாட்டின் நீண்ட நாட்கள் பிரதமர் பதவிகித்த ஒரே நபர் என்ற சாதனை படைத்துள்ளார்.
2020ம் ஆண்டும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து ஷின்சோ அபே பதவி விலகுவதாக அறிவித்தார். தன் பிரதமர் பதவி முடிவடைய ஓராண்டு இருந்தும், தன் உடல்நலக்குறைவால் நாட்டின் நலன் கெட்டுவிடக்கூடாது எனக்கூறி பிரதமர் பதவியை முன்னதாகவே ராஜினாமா செய்தார் ஷின்சோ அபே.
நாரா நகரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஷின்சோ அபே இன்று கலந்துகொண்டார். நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த அவர் மீது மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். குண்டு பாய்ந்த நிலையில் ஷின்சோ அபே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷின்சோ அபேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.