நாடு முழுக்க அவரச பிரகடனம்...!! மன உளைச்சலில் ஜப்பான், மண்டையை பிய்த்துக் கொள்ளும் பிரதமர்..!!

இந்நிலையில் ஜப்பானில் கொரோனா  வேகமெடுக்க தொடங்கியுள்ளன. இதுவரை சுமார்  9,751 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  சுமார் 170 பேர் உயிரிழந்துள்ளனர் . 

japan call to all states for implement emergency all states

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அதன் வேகத்தை மட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த ஜப்பான் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளதன.  ஏழு மாகாணங்களில் அவசர பிரகடனத்தை ஜப்பான் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ள நிலையில் தற்போது அனைத்து மாகாணத்திலும் அவசரநிலை பிரகடனப்படுத்த அவர் அழைப்பு விடுத்துள்ளாதாக தெரிகிறது ,  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ்  ஒட்டுமொத்த சீனாவையும் கபளீகரம் செய்தது ,  அங்கு 82  ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது .  சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்

.  japan call to all states for implement emergency all states

சுமார் இரண்டு மாதகாலம் சீனாவை கபளீகரம் செய்த அந்த வைரஸ் மெல்ல மெல்ல அமெரிக்கா ,  ஐரோப்பா ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களுக்கும் பரவியது . தற்போது வரை 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த  வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் .  அமெரிக்கா ,  இத்தாலி ,  ஸ்பெயின் ,  பிரான்ஸ் ,  ஜெர்மனி ,  உள்ளிட்ட நாடுகளில் மக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் .  இத்தனை நாடுகள் பாதிக்கப்பட்டு இருந்தும் சீனா ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் தாக்கத்திலிருந்து விலகியே  இருந்தன , ஆனாலும்  கொரோனா என்ற கொடிய வைராசின் ஆக்டோபஸ் கரங்களில் இருந்து இந்த நாடுகளாலும் தப்ப முடியவில்லை. இந்நாடுகளில் மொதுவாக ஊடுருவிய கொரோனா வைரஸ்  இங்கு மெல்ல மெல்ல வளர்ந்து  தற்போது விஸ்வரூபம்  எடுத்துள்ளது . இந்நிலையில்  ஜப்பான் தலைநகர்  டோக்கியோ , மற்றும்  ஒசாகா உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு அவசர நிலைப் பிரகடனம் செய்து அந்நாட்டு பிரதமர் ஷின்சே அபே உத்தரவிட்டார்.

japan call to all states for implement emergency all states

 ஜப்பானில் வைரஸ் வேகமாக பரவுவதால் இதை தடுக்க  மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர்  வேண்டுகோள் விடுத்தார்.அதுமட்டுமின்றி சில மாகாணங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாங்களாகவே முன்வந்து ஊரடங்கை அறிவித்தனர் .  இந்நிலையில் ஜப்பானில் கொரோனா  வேகமெடுக்க தொடங்கியுள்ளன. இதுவரை சுமார்  9,751 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  சுமார் 170 பேர் உயிரிழந்துள்ளனர் .  அதாவது கடந்த ஒரு வாரத்திற்குள் இங்கு நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை  இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது . இதனால் ஜப்பான் அரசு  மிகவும் கலக்கம் அடைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு ஆரவாரமாக  பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் ,  தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடியாத நிலைக்குஜப்பான்ஆளாகி உள்ளது . 

japan call to all states for implement emergency all states 

இதனால் மிகுந்த மனச் சோர்வுக்கு ஆளாகியுள்ள ஜப்பான்  தற்போது கொரோனா  வைரஸ்  பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது . இதனால் அனைத்து மாகாணங்களிலும் அவரச நிலை பிரகடனப்படுத்தினால் மட்டுமே கொரோனாவை  கட்டுப்படுத்த  முடியுமென  முடிவுக்கு வந்துள்ள ஜப்பான் . இதனால் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும்  அழைப்பு விடுத்துள்ள ஜப்பான்.  உடனே அவசர நிலையை பிரகனம் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஆனால் இவரை ஜப்பான் அரசு எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கவில்லை.  இதற்கிடையில் பிரதமர் ஷின்சோ அபே ஆளுநர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios