#Breaking : உலகின் மிகப்பெரிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி… வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா!!

பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை நாசா வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தியது. 

James Webb Space Telescope launched by nasa

பிரெஞ்சு கயானாவில் இருந்து ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை நாசா விண்ணுக்கு செலுத்தியுள்ளது. இதுவரை பூமியில் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கிகளிலேயே மிகவும் பெரிய தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பிரெஞ்சு கயானாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது. விண்வெளி பற்றிய ஆராய்ச்சிகளை பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. விண்ணில் இருப்பதை அறிய தொலைநோக்கி முக்கியமானது ஆகும். தொலைநோக்கியின் உதவியுடன் முன்னாள் வானியல் ஆய்வாளர்கள் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டுபிடித்துள்ளனர். வளர்ந்துவரும் காலத்தில் நவீன தொலைநோக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவை பூமியிலிருந்து விண்ணில் உள்ள பல நட்சத்திரங்களை அறிவதற்கு முக்கியமானதாக இருந்தது. ஆனாலும் காற்றுமாசு, வளிமண்டல தூசுகள் காரணமாக பூமியிலிருக்கும் தொலைநோக்கிகள் மூலமாக விண்வெளி நிகழ்வுகளை துல்லியமாக பார்க்கமுடிவதில்லை.

James Webb Space Telescope launched by nasa

இதன் காரணமாக விண்வெளியில் தொலைநோக்கியை நிலைநிறுத்த ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டனர். அதன்படி ஹப்பிள் என்ற தொலைநோக்கி பூமிக்கு வெளியே விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. அந்த விண்வெளி தொலைநோக்கி மனிதனுக்கு இதுவரை தெரிந்திடாத பல அரிய விண்வெளி தகவல்களை தெரிந்திட வழி வகுத்தது.  தற்போது அதன் அடிப்படையில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஜேம்ஸ் வெப் என்ற விண்வெளி தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளனர். 1989 இல் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2000 களின் முற்பகுதியில், விண்வெளியில் ஏவப்படும் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த தொலைநோக்கியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர் கூறியுள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் இந்த தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

 

இந்த விண்வெளி தொலைநோக்கி பல விதமான சோதனைகளுக்கு உட்படுத்தினர். இந்த விண்வெளி தொலைநோக்கியை நேற்று விண்ணில் செலுத்த இருப்பதாக விஞ்ஞானிகள் முன்பு கூறினர். ஆனால் சரியில்லாத வானிலை காரணமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் இந்த தொலைநோக்கி இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்வெளி தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைவுக்கு சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப் பணியை மேற்கொள்ளும். பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்தாட பல அரிய தகவல்களை அடுத்த சில ஆண்டுகளுக்கு அளிக்க உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios