புல்வாமா தாக்குதலைப்போல் இந்தியாவில் மீண்டும் ஒரு தாக்குதல்  நடத்த பாகிஸ்தான் நாட்டு தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்- இ- முகமது அமைப்பு திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவு அமைப்பான ‘ரா ’ எச்சரித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகலாம் என்றும் அது தெரிவிக்கிறது.

காஷ்மீர் விவகாரத்தை தொடந்து, தீவிரவாத அமைப்புகளின் துணையுடன்  இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக இந்தியாவின் உளவு அமைப்பான ‘ர’ எச்சரித்துள்ளது.  இந்திய உள்துறை, மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்து  தீவிரதாவிதிகளை இந்தியாவிற்குள்  ஊடுருவ பாகிஸ்தான் முயற்ச்சி செய்து வருகிறது. பாகிஸ்தான்,மற்றும் ஆப்கனிஸ்தானை  மையமாக கொண்டு செயல்படும் தீவிரவாத குழுக்களுடன் இணைந்து தாக்கதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக க்கொண்டு  செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின்  ஆயுதப்படை கமாண்டர் ரவுப் அஷ்கார் தலைமையில் 

பாகிஸ்தான் பவல்பூரில் தீவிரவாத அமைப்புகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, அதில் முக்கிய தீவிரவாத இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் காஷ்மீர், டெல்வி, உள்ளிட்ட இடங்களில் தாக்கதல் நடத்தி பீதியை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்துவதி இந்தியாவை அச்சுறுத்தவும், காஷ்மீரில் உள்ள அரசியில் தலைவர்கள், மற்றும் பள்ளி, முக்கிய அதிகாரிகள் , அரசுக்கு சொந்தான கட்டிடங்கள்  மற்றும் மருத்துவமனை போன்ற இடங்களை குறிவைத்து அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் ரா எச்சரித்துள்ளது.