Italian Open Tennis Natal Marin Silich advanced next level
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் நடால் மற்றும் மரின் சிலிக் ஆகியோர் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். இதர வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி இத்தாலியில் நடைப்பெற்று வருகிறது. இதன் கனடாவைச் சேர்ந்த இளம் வீரர் டெனிஸ் ஷபோலோவும், உலகின் இரண்டாம் நிலை வீரர் நடாலும் மோதினர்.
இதில், டெனிஸ் ஷபோலோவை 6-4, 6-1 என்ற நேர் செட்களில் வீழ்த்தி நடால் காலிறுதிக்கு முன்னேறினார்.
பின்னர், காலிறுதியில் இத்தாலியின் பேபியோ போகினியை நேற்று எதிர்கொண்ட நடால் 4-6, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல, மற்றொரு காலிறுதியில் சிலிக் 6-3, 6-3 என்ற கணக்கில் கரேனா பஸ்டாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதேபோன்று, முன்னாள் முதல்நிலை வீரர் ஜோகோவிச் 6-1, 7-5 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ஆல்பர்ட் ராமோஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மகளிர் பிரிவில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனை வோஸ்னியாக்கி, 6-2, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் லாட்வியாவின் அனஸ்டிஜாவை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
உலகின் முதல் நிலை வீராங்கனை சிமானோ ஹலேப், மரியா ஷரபோவா, அனெட் கொண்டவிட், ஜெலனா ஓஸபென்கோ, நடப்புச் சாம்பியன் எலினா விட்டோலினா ஆகியோரும் தங்கள் ஆட்டங்களில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
