Asianet News TamilAsianet News Tamil

Singapore Parry Field | சிங்கப்பூர் பேரி திடலில் விஷம் கலந்திருப்பதாக சந்தேகம்! அடுத்தடுத்து பலியான 2 நாய்கள்!

சிங்கப்பூரில் உள்ள பேரி திடலுக்கு (Parry Field) நடைபயிற்சிக்கு அழைத்துச்செல்லப்பட்ட இரு நாய்கள் அடுத்தடுத்த வினோதமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

It is Singapore Parry Field poisoned! 2 dogs died in succession dee
Author
First Published Oct 9, 2023, 1:01 PM IST | Last Updated Oct 9, 2023, 1:01 PM IST

சிங்கப்பூர் நாட்டின், கோவன் (Kovan) வட்டாரத்தில் பேரி திடல் ((Parry Field)) அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் நடைபயிற்சிக்கு செல்வது வழக்கம். அங்கு வரும் மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளையும் அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு அழைத்து வரப்பட்ட இரண்டு நாய்கள் வினோதமான முறையில் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாளில், இந்த பேரி திடலில் பேரி தொடக்கப்பள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போத் அந்த இடத்தில் பள்ளி இல்லை. வெறும் திடல் மட்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்களின் உரிமையாளர்கள் அவற்றை பேரி திடலுக்கு விளையாட அழைத்து வருவது வழக்கம். அவ்வாறு அண்மையில் பேரி திடலுக்கு விளையாட அழைத்து வரப்பட்ட பாலோ (Palo), மற்றும் சன்கிஸ் (Sunkiss) எனும் இரு நாய்கள் வினோதமான முறையில் மர்மமாக பலியாகின.

இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும், நாய்கள் பலியானதற்கான தெளிவான காரணம் இன்னும் அறியப்படவில்லை.

இதனிடையே, பேரி திடலிலும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நாய்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய விஷப் பொருள் இருக்கலாம் என சந்தேகிக்ககப்படுகிறது.

Singapore News | இ-சிகரெட் பிடியில் சீரழியும் மாணவர்கள்! கவலையில் சிங்கப்பூர் கல்வித்துறை!

இதுதொடர்பாக, தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும், செல்லப் பிராணிகளையும், நாய்களையும் பேரி திடலுக்குக் அழைத்து வருவதை தவிர்க்கும்படி உரிமையாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விஷப்பொருளால் பாதிக்கப்பட்ட நாய்கள் சில அறிகுறிகளைக் காட்டுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவை, விஷப் பொருட்களால் பாதிக்கப்பட்ட நாய்கள் இடைவிடாமல் குரைத்தல், உடல் நடுக்கம், வலிப்பு ஆகியவை ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பெருமைகொள்கிறது.. 50 ஆண்டுகள் கழித்து முதல் தங்கம் - ஆசிய விளையாட்டு போட்டியில் அசத்திய சாந்தி!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios