சிங்கப்பூரில் மாணவர்களிடையே இ-சிகரெட் பழக்கம் அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் சிங்கப்பூர் நாடாமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூரில் இ-சிகரெட் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்டுளது. அதை விற்கவும், வாங்குவதும் குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி இ-சிகரெட் பயன்படுத்துபவர்களுக்கு, 2000 சிங்கப்பூர் டாலர் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இந்நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் இ-சிகரெட் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்துப் பேசிய இரண்டாம் கல்வித்துறை அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் (Maliki Osman), சுமார் 800 மாணவர்கள் இ-சிகரெட் பயன்படுத்தியன் பேரில் சுகாதார அறிவியல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களிடையே இ-சிகரெட் பழக்கத்தின் நிலை என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த 2020ம் ஆண்டுக்கு முன்பு சுமார் 50 மாணவர்களே இ-சிகரெட் பயன்படுத்தியதாக சுகாதார அறிவியல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டுசெல்லப்பட்டு கவுன்சிலிங் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

சிங்கப்பூர்வாசிகளே கவனம்! புகைமூட்டம் ஏற்பட வாய்ப்பு! வெளியே செல்லும் முன் காற்றின் தரத்தை செக் செய்யவும்

தற்போதைய சூழ்நிலையில், மாணவர்களிடத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் இ-சிகரெட் பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும், இதுகுறித்து கல்வி அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் கவலை அடைந்திருப்பதாகவும் அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் கூறினார்.

சிங்கப்பூரில் இ-சிகரெட் விற்பனையும், வாங்குவதும் தடைசெய்யப்பட்ட நிலையிலும், அவை ஆன்லைன் வாயிலாகச் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு பொதுமக்களிடம் புழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் தீபாவளி கொண்டாட்டம்! செப் 30 முதல் தொடக்கம்!

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D