ஹமாஸ் சுரங்கப் பாதைகளைக் குறிவைத்து காசாவைச் சுற்றி வளைத்த இஸ்ரேல்!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடித்துவரும் நிலையில், ஹமாஸ் இதுவரை கண்டிராத பெரும் சக்தியுடன் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .
இஸ்ரேலிய இராணுவம் காசா நகரில் செயல்பட்டுவரும் பாலஸ்தீனிய பயங்கரவாத அமைப்பான ஹமாஸைச் சுற்றி வளைத்துள்ளது என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
காசாவில் பாலஸ்தீனிய எல்லைக்கு அடியில் உள்ள ஹமாஸின் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பைக் கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் பணியை இஸ்ரேலிய இராணுவம் தொடங்கியதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தைத் தாண்டி நீடித்துவரும் நிலையில், ஹமாஸ் இதுவரை கண்டிராத பெரும் சக்தியுடன் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார் . ஒவ்வொரு மணிநேரமும், ஒவ்வொரு நாளும் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவின் மீது இஸ்ரேலிய தரைப்படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில்,அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு சூறாவளிப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அப்போது, டோக்கியோவில் உள்ள G7 நாடுகளின் வெளியுறவுத்துறையிடம் இஸ்ரேல்-ஹமாஸ் போரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஒருமித்த கருத்தை எட்ட வேண்டும் என்று கோரினார். காசாவில் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலுடனான போர் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கியதில் இருந்து பாலஸ்தீனப் பகுதியில் பலியானவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. போர்நிறுத்தக் கோரிக்கையை இஸ்ரேல் அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் தாக்கல்கள் தொடர்வதால் காசாவில் உள்ள மக்கள் கால்நடையாகவே பாதுகாப்பான புகலிடம் தேடி பயணிக்கத் தொடங்கியுள்ளனர்.
பகவத் கீதை ஆபாசமானது, அருவருப்பானது; யூதர்கள் படுகொலைக்குக் ஆதரவானது: எழுத்தாளர் ஸ்லாவோஜ் ஜிசெக்