திசை மாறும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்; லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்!!
இஸ்ரேல் தெற்கு லெபனான் மீது வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகிறது. தெற்கு லெபனானில் இருந்து ராணுவ டாங்குகளை எதிர்கொள்ளும் ராக்கெட்டுகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதால் தற்போது இஸ்ரேலின் கவனம் தெற்கு லெபனான் மீது திசை திரும்பியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே இன்று ஐந்தாவது நாளாக பெரிய அளவில் போர் நடந்து வருகிறது. இருபக்கமும் நடத்தப்படும் இந்தத் தாக்குதலில் இதுவரை 2000த்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசா மீது இஸ்ரேல் பெரிய அளவில் தாக்குதல் நடத்தி அத்தியாவசிய சேவைகளை நிறுத்தியுள்ளது. காசாவின் வெளிப்புற பகுதியை இஸ்ரேல் நெருங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் இருக்கும் ராணுவ தளவாடத்தை குறிவைத்து தெற்கு லெபனானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தெற்கு லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் கிராமமான தைராவுக்கு எதிரே, இஸ்ரேலின் அரபு அல்-அரம்ஷே நகருக்கு அருகில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உயிரிழப்புகள் பற்றிய விவரங்களோ அல்லது யார் பொறுப்பாக இருக்கலாம் போன்ற விவரங்களோ உடனடியாக தெரிய வரவில்லை.
காசாவில் இருந்து 2.5 லட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்வு: ஐ.நா. தகவல்!
பயங்கர சக்தி வாய்ந்த ஆயுதங்களை வைத்திருக்கும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பினர் இரண்டு ஏவுகணைகளை இஸ்ரேல் மீது செலுத்தியதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது. தெற்கு லெபனான் நகரமான அர்மெய்ஷ்ஷில் வசிப்பவர்கள் தங்களது நகரின் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல்கள் நடத்தியதாக தெரிவித்துள்ளனர். தைராவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் போர் மட்டுமல்ல; நாஸ்ட்ரடாமஸ் கணித்த அடுத்த பெரிய விஷயம் இதுதான்!
லெபனானில் இருக்கும் தைராவில் உள்ள சில வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு அருகில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் இருந்து வெளியேறும் வெள்ளை புகை மண்டலத்தை லெபனான் நாட்டின் ஊடகங்கள் படம் பிடித்து வெளியிட்டு வருகின்றன. அந்தளவிற்கு லெபனான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதலை துவங்கியுள்ளது.