Asianet News TamilAsianet News Tamil

பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் அயர்லாந்து, நார்வே, ஸ்பெயின்; கடுமையாக எதிர்க்கும் இஸ்ரேல்!

அயர்லாந்தும் நார்வேயும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை பாலஸ்தீனியர்களுக்கும் முழு உலகிற்கும் அறிவித்துள்ளன என்று என்று இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

Israel recalls ambassadors from Ireland, Norway over recognition of Palestinian state sgb
Author
First Published May 22, 2024, 2:53 PM IST

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக கூறியதால், அயர்லாந்து மற்றும் நோர்வேயில் உள்ள இஸ்ரேலின் தூதரக அதிகாரிகளை உடனடியாக இஸ்ரேலுக்குத் திரும்புமாறு இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் உத்தரவிட்டுள்ளார்.

அயர்லாந்தும் நார்வேயும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை பாலஸ்தீனியர்களுக்கும் முழு உலகிற்கும் அறிவித்துள்ளன என்று என்று காட்ஸ் கூறியுள்ளார். பாலஸ்தீனத்தை இந்த நாடுகள் அங்கீகாரிப்பது காசாவில் ஹமாஸ் குழுவினரிடம் பணயக்கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை மீட்கும் முயற்சிகளுக்கு பின்னவை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் மற்றும் ஈரானின் ஜிஹாதிகளுக்கு ஆதரவு அளிப்பதன் போர்நிறுத்தம் ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாவும் அவர் கூறினார். ஸ்பெயினும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இதே நிலைப்பாட்டை எடுத்தால் ஸ்பெயினுக்கான இஸ்ரேல் தூதரையும் திரும்ப அழைத்துக்கொள்வோம் எனவும் காட்சி தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் தொடர்பு... முதியவரை மிரட்டி ரூ.32 லட்சம் அபேஸ் செய்த வாட்ஸ்அப் மோசடி கும்பல்!

முன்னதாக புதன்கிழமை நார்வே பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர் அறிவித்தார். "இந்த அங்கீகாரம் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி திரும்ப முடியாது" என ஸ்டோர் குறிப்பிட்டுள்ளார். மே 28ஆம் தேதி முதல் நார்வே அதிகாரப்பூர்வமாக பாலஸ்தீனிய அரசை அங்கீகரிக்கும் என்றும் ஸ்டோர் கூறினார்.

பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதன் மூலம், அரபு அமைதித் திட்டத்தை நார்வே ஆதரிக்கிறது என்றும் பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாக செயல்படும் அடிப்படை உரிமை உண்டு என்றும் நார்வே பிரதமர் ஸ்டோர் தெரிவித்தார்.

இன்னும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பாலஸ்தீன அரசுக்கு அங்கீகாரம் வழங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத நோர்வே அதே முடிவை அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தொடங்கிய இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரைத் தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவருகிறது. மே மாதம் காசா பகுதியின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளில் இஸ்ரேலியப் படைகள் தாக்குதல்கள் நடத்தியதால், ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறியனர்.

2011ஆம் ஆண்டில் பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளதாக உலக வங்கி தீர்மானித்தது.

புயல் வேகத்தில் பாய்ந்த கார்... அமெரிக்காவில் பயங்கர விபத்தில் 3 இந்திய வம்சாவளி மாணவர்கள் பலி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios