இஸ்ரேல் - ஹமாஸ் போர்.. 14க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலின் தொடக்கத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் வீடியோகிராபர்கள், போரைப் பற்றி மக்களுக்கு தெரிவிக்க, கடுமையான சூழல்களில் பணியாற்றி வருகின்றனர்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதல் தொடங்கியதில் இருந்து, குறைந்தது 15 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) நேற்று திங்களன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. CPJ என்பது நியூயார்க்கை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
இது பத்திரிகை சுதந்திரம் மற்றும் உலகளவில் பத்திரிகையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட 15 ஊடகவியலாளர்களில் 11 பேர் பாலஸ்தீனியர்கள், மூன்று பேர் இஸ்ரேலியர்கள் மற்றும் ஒருவர் லெபனானியர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 8 ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும், 3 பேரை காணவில்லை (அல்லது) தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்: வெறும் 15 நொடிகளில் இஸ்ரேலை தாக்கும் ஹமாஸ் ஏவுகணை!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அந்த நிறுவனம் இறந்த பத்திரிகையாளர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது, "பத்திரிகையாளர்கள் நெருக்கடியான காலங்களில் முக்கியமான பணிகளைச் செய்யும் சாமியார்கள் தான. இந்த இதயத்தை உடைக்கும் மோதலை உலகிற்கு காட்ட அப்பகுதியில் உள்ள ஊடகவியலாளர்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள்.
அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்துத் தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று ஷெரீப் மன்சூர், CPJ இன் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.