காசா முனையில் நிலவும் பதற்றம்.. இஸ்ரேல் பயங்கர வான்வெளி தாக்குதல்.. பயங்கரவாத அமைப்பின் முக்கிய 2 தளபதி பலி

காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் 2-வது தளபதி உயிரிழந்தார். மேலும் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்று வரும் மோதலில் குழந்தைகள் உட்பட இதுவரை 29 பேர் பலியாகியுள்ளனர்.
 

Israel-Gaza: Israel Attack in Gaza - killed second top militant

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக, பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீதும் இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதலும் நடத்தப்படு வருகின்றனர். பாலஸ்தீனத்தின் மேற்கரை பகுதியை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் எனும் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. அதுபோல் காசா முனையில் ஹமாஸ் மட்டுமின்றி ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

Israel-Gaza: Israel Attack in Gaza - killed second top militant

அந்த வகையில் காசா முனையில் செயல்பட்டு வரும் பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் எனும் பயங்கரவாத அமைப்பு ஹமாஸ் உடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இதற்கு ஈரானின் பொருளுதவி உள்ளிட்டவற்றை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேலுடன் எந்த வகையிலும் இணக்கமாக செல்லக்கூடாது என்பதை கொள்கையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் கடந்த வாரம் பாலஸ்தீன மேற்குகரையில் உள்ள ஜெனின் பகுதியில் இஸ்ரேல்,  பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகத் அமைப்பின் மூத்த தளபதியை அதிரடியாக கைது செய்தது.

மேலும் படிக்க:china: taiwan: united states: pelosi: அமெரி்க்கா உடனான பேச்சுவார்த்தை அனைத்தும் ரத்து: சீனா அதிரடி அறிவிப்பு

இதனால் இஸ்ரேல் மீது தாக்கல் நடத்த திட்டமிட்டிருந்த அந்த அமைப்பை குறி வைத்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் பயங்கர வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில், பயங்கரவாத அமைப்பின் ஆயுதக்குழு பிரிவான அல்-குவாட்ஸ் பிரிகெடிஸ் தளபதி தைஷர் அல் ஜபரி கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவர் மேற்குகரையின் வடக்கு பகுதியில் உள்ள பிரிவுக்கு தளபதியாக இருந்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் இஸ்ரேல் நடத்திய இந்த கோர தாக்குதலில் மொத்தம் 10 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள் உட்பட பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர்.

Israel-Gaza: Israel Attack in Gaza - killed second top militant

இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பின் கட்டுபாட்டில் இருக்கும் காசாவில் இருந்து இஸ்ரேல் பகுதிக்குள் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் தொடுக்கப்பட்டு, இரு தரப்புக்குமிடையே தொடர்ந்து மோதல் அதிகரித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேல் படையினர் நேற்றிரவு நடத்திய வான்வெளி தாக்குதலில், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் பயங்கரவாத அமைப்பின் மேலும் ஒரு தளபதி கொல்லப்பட்டுள்ளார்.   காசா முனையின் தெற்கு பகுதியில் தளபதியாக இருந்த ஹலித் மன்சூர் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் வான்வெளி தாக்குதலில் பயங்கரவாத அமைப்பின் 2 தளபதிகள், பயங்கரவாதிகள், பொதுமக்கள், குழந்தைகள் என மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க:sri lanka crisis: இலங்கை பொருளாதார சிக்கல் இன்னும் ஓர் ஆண்டு நீடிக்கும்: அதிபர் விக்ரமசிங்கே குமுறல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios