கோபாலன் அய்யருக்கும்- கமலா ஹாரிஸுக்கும் இப்படியொரு தொடர்பா..? மிரள வைக்கும் ஆச்சர்யங்கள்..!

கமலாவின் முதல் சித்தி, டாக்டர் சரளா தற்போது சென்னையில் வாழ்ந்துவருகிறார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என தெரிகிறது. 

Is there such a connection between Gopalan Iyer and Kamala Harris? Surprising

மன்னார்குடியை சேர்ந்த, பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன் ஐயர் என்பவர் ஆங்கிலேயர் காலத்து ஐசிஎஸ் அதிகாரி.

 பிறகு 1960களில் நேரு ஆட்சிகாலத்தில் டெல்லியில் உயர் அதிகாரியாக இருந்தவர். தன்னுடைய கடைசிகாலத்தில் சென்னை பெசன்ட் நகரில் வாழ்ந்து மறைந்தவர். கோபாலனுடைய மகள் ஷியாமளா, 1958ஆம் ஆண்டு தன்னுடைய 19 வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார்.

அங்கு  கல்லூரியில் அவருக்கு அறிமுகமான ஜமாய்க்கா நாட்டை சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரை திருமணம் செய்துகொள்கிறார். ஷியாமளாவிற்கும் டொனால்ட் ஹாரிஸுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறக்கின்றன - கமலா ஹாரிஸ் & மாயா ஹாரிஸ். 1971 ஆம் ஆண்டு டொனால்டிடம் இருந்து விவாகரத்து பெற்றுக்கொள்கிறார் ஷியாமளா. பிறகு இரண்டு குழந்தைகளையும் சிங்கிள் மதராக அமெரிக்காவில் வளர்க்கிறார்

.Is there such a connection between Gopalan Iyer and Kamala Harris? Surprising
 
கமலாவின் சகோதரி, மாயா ஹாரிஸ் தன்னுடைய 17 வயதில், பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார். அவருக்கு மீனாக்ஷி (மீனாக்‌ஷி ஷியாமலா) என்று பெயர் சூட்டி வளர்க்கிறார்கள். மீனாவின் பயாலஜிகல் ஃபாதர் யார் என்பது குறித்த தகவல்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை.

 அமெரிக்காவில் இது ஒரு பெரிய விசயமல்ல. ஷியாமளா, கமலா, மாயா மூவரும் சேர்ந்து அந்த குழந்தை எந்த குறையும் இல்லாமல் வளர்த்திருக்கிறார்கள். அதன் பல காலத்திற்கு பிறகு, மாயா தன்னுடைய கல்லூரி காலத்து நண்பரான டோனி என்கிற கருப்பினத்தவரை கல்யாணம் செய்துகொள்கிறார். மாயா சட்டம் பயின்று அவரும் ஒரு பிரபலமானவராகதான் இப்போது இருக்கிறார். Is there such a connection between Gopalan Iyer and Kamala Harris? Surprising

மாயாவின் மகள் மீனா (மீனாக்ஷி ஷியாமளா) சட்டம் பயின்று தற்போது வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறார். மீனா கல்யானம் செய்திருப்பது நைஜீரியா நாட்டினை சேர்ந்த நிகோலஸ் என்பவரை.. கோபாலனின் ஒரே மகன், ஷியாமளாவின் உடன்பிறந்த சகோதரர் பாலச்சந்திரன் கல்யானம் செய்திருப்பது ஒரு மெக்சிகன் நாட்டை சேர்ந்த Latino பெண்மணியை. அவர்களுடைய மகள் சாரதா தற்போது அமெரிக்காவில் ஆங்கில பேராசிரியராக இருக்கிறார். 

கமலா ஹாரிஸ் 2014ஆம் ஆண்டு, தன்னுடைய 49ஆவது வயதில் டக்லஸ் என்கிற ஒரு யூத இனத்தவரை கல்யாணம் செய்துகொண்டார். ஷியாமளாவின் முதல் தங்கை , அதாவது கமலாவின் முதல் சித்தி, டாக்டர் சரளா தற்போது சென்னையில் வாழ்ந்துவருகிறார். அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என தெரிகிறது. ஷியாமளாவின் இரண்டாவது தங்கை, அதாவது கமலாவின் இரண்டாவது சித்தி, மகாலட்சுமி தற்போது கனடா நாட்டில் அவர் கணவருடன் வாழ்ந்துவருகிறார். அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. Is there such a connection between Gopalan Iyer and Kamala Harris? Surprising

மொத்தத்தில் பைங்காநாடு வெங்கட்ராமன் கோபாலன் அவர்களுடைய வாரிசுகள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக வாழ்ந்து, இனம் , மொழி, ஜாதி, மதம் அனைத்தையும் அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள்! அதன் விளைவாக இன்று கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார்!  வாழ்க கோபாலன் ஐயர் புகழ்!Is there such a connection between Gopalan Iyer and Kamala Harris? Surprising

ட்ரம்ப இந்த உலகம் கோமாளியா பாத்தது உண்மை தான். ஆனால், அவர் எதார்தமான ஆளு...எந்த நாட்டுக்கும் எந்த இன குழுக்களுக்கும் பெரிதாக தீங்கு செய்யவில்லை. ட்ரம்ப் அதிபராக இருந்தது அமெரிக்காவுக்கு கேடாக இருக்கலாம் ஆனால், உலகத்துக்கு கேடாக இல்லை. அடுத்த தேர்தலில் கமலா ஹாரிஷ் ஜனாதிபதியாக ஆனாலும், ஆச்சர்யப் படுவதற்கில்லை. அந்த அளவுக்கு அவுக ஒரு புரட்சி தலைவி. சீனா அடுத்த ஆட்டத்த ஆரம்பிக்க போகிறது. அமெரிக்கா அதற்கு செக் வைக்க போகிறது. என்ன நடக்குமோ... ஈஸ்வரா பொருத்திருந்து பாப்போம்...’’ என ஊடகத்துறையில் பணியாற்றி வரும் உமாபதி கிருஷ்ணன் ஒரு பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios