தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தலிபான்களுக்கு தொடர்பா..? ஆப்கானிஸ்தான் புதிய அரசு பகிரங்க அறிவிப்பு..!

எவ்வாறிருப்பினும் தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது

Is the Taliban linked to the Liberation Tigers of Tamil Eelam (LTTE)? Afghanistan's new government announces

தலிபான் வசமானது  தலைநகர் காபூல். ஆப்கானிஸ்தானில் மதசார்பற்ற‌ செக்யூலர் ஆட்சி அமைத்தனர் தலிபான். ஆப்கானிஸ்தானை 'ஆப்கினிஸ்தான் இஸ்லாமிக் எமிரேட்' என தலிபான்கள் பிரகடனம் செய்துள்ளனர்.Is the Taliban linked to the Liberation Tigers of Tamil Eelam (LTTE)? Afghanistan's new government announces

இந்நிலையில், ‘தலிபான்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்   எவ்விதத் தொடர்பும் இல்லை‘ எனத் தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் (Suhail Shaheen) தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்,’’எங்களுடைய இயக்கத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான விடுதலைப் படை. கடந்த 20 ஆண்டுகளாக தமது நாட்டின் ஆப்கானிஸ்தானின் விடுதலைக்காக வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியது.

Is the Taliban linked to the Liberation Tigers of Tamil Eelam (LTTE)? Afghanistan's new government announces

இதேவேளை, தலிபான்களை பயங்கரவாதிகளாக இலங்கை கருதக்கூடாது. தங்கள் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய இலங்கையின் முன்னோர்களைப் போல தாங்கள் ஆப்கானிஸ்தானின் சுதந்திரப் போராளிகள். எவ்வாறிருப்பினும் தலிபான் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் ஆப்கானிஸ்தானில் உள்ள பௌத்த தளங்கள் ஆபத்தில் இருக்காது’ என்று ஷாஹீன் வலியுறுத்தினார். அமெரிக்கப் படைகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் கைப்பற்றினர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios