இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமக் (AMAQ) செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி இலங்கை குண்டுவெடுப்புக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறியுள்ளது. இலங்கையில் கடந்த இரு தினக்களாக அடுத்தடுத்து 9 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் இதுவரை 321 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சில இடங்களில் குண்டுவெடிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

இதுவரை இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு ஐ எஸ் அமைப்பு பொறுப்பேறிருப்பதாக ராய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை நீர்கொழும்பு, கடான, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய புதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

 

அதில் குண்டுகளை உடல் முழுவதும் கட்டிக் கொண்டு தேவாலயம் நோக்கி வரும் தீவிரவாதி அங்கும் இங்கும் அலையும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேவாலயத்திற்குள் நுழையும் முன் எதிர் வரும் குழந்தைக்காக நின்று வழிவிட்ட பிறகு அந்தத் தீவிரவாதி கடக்கிறான். அதன்பிறகே தேவாலயத்திற்குள் நுழைந்து குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளான். அந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. "