ஈரக்கமில்லாத ஈரான்... 176 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது... வருந்திய அதிபர் ஹசன் ரவுஹானி..!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் உயிரிழந்தததாக அறிவிக்கப்பட்டது. முதலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என்று கூறப்பட்டது. 

Iran plane crash...Iran admits shooting down Ukrainian airliner 'unintentionally'

ஈரானில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 176 பேருடன் சென்ற உக்ரைன் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாக கூறப்பட்ட நிலையில் தவறுதலாக சுட்டு வீழத்தப்பட்டது என ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அறிவித்துள்ளார். 

Iran plane crash...Iran admits shooting down Ukrainian airliner 'unintentionally'

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே நடுவானில் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் உயிரிழந்தததாக அறிவிக்கப்பட்டது. முதலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என்று கூறப்பட்டது. 

Iran plane crash...Iran admits shooting down Ukrainian airliner 'unintentionally'

இதனிடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்தது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பல்வேறு தரப்பிலும் எழுந்தது. உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வந்தது.

Iran plane crash...Iran admits shooting down Ukrainian airliner 'unintentionally'

ஆனால், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அதேபோல், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தினர். இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியதால் சந்தேகம் வலுத்தது. 

Iran plane crash...Iran admits shooting down Ukrainian airliner 'unintentionally'

இந்நிலையில், ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய போது தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் பாக்தாத்தில் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி அறிவித்துள்ளார். மனித தவறு காரணமாக உக்ரைன் பயணிகள் விமானத்தை தங்கள் நாட்டு ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளார். திட்டமிட்டு தங்கள் ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தவில்லை எனவும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios