ஈரான்  இராணுவத்தளபதி காசிம் சுலைமானி படுகொலை அமெரிக்கா ஈரான் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேலும் ஒரு ராணுவ தளபதி மர்மமான முறையில் படுகொலைசெய்யப்பட்டிருப்பது,   ஈரானை மேலும் கொந்தளிப்படைய செய்துள்ளது . கடந்த 3 ஆம் தேதி ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசியின் சுலைமானி படுகொலை செய்யப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் உத்தரவின்பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் பகிரங்கமாக அறிவித்தது . 

இதனையடுத்து  காசின் சுலைமானி உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே பழிக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய ஈரான் , ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளை குறிவைத்து  ஏவுகணை தாக்குதல் நடத்தியது .  இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் பகிரங்கமாக அறிவித்தது ,    ஆனால் தங்களது ராணுவ வீரர்கள் பத்திரமாக உள்ளனர் அமெரிக்காவுக்கு இதில் எந்த பாதிப்பும் இல்லை என அமெரிக்கா மறுத்தது . இந்நிலையில் அமெரிக்கா ஈரான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.  இது  மூன்றாம்  உலகப்போருக்கு இட்டுச் சென்று விடுமோ என்ற அச்சத்தில்  சர்வதேச நாடுகளை பதற்றமடைய  செய்துள்ள நிலையில் தங்களுக்கு போரில் ஆர்வம் இல்லை என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்தது . 

ஆனாலும் இருநாடுகளும்  சிறு சிறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில் பாக்தாத் நகரில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  கர்பலா நகரில் ஈரான் ஆதரவு போராட்டக்குழு தளபதி அப்பாஸ் அலி அல்  சௌதி என்பவர் கொல்லப்பட்டதாக  செய்திகள் வெளியாகியுள்ளன .  இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள உள்ளூர் பத்திரிகைகள் மர்ம நபர்கள் சுட்டதில் படைத்தளபதி கொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.  இதை அந்நாட்டு ராணுவமும் அங்கிகரித்துள்ளது. ஏற்கனவே சுலைமானி கொல்லப்பட்ட உக்கிரத்தில் உள்ள  ஈரான் தற்போது அல் சைதி  படுகொலையால் மேலும் கடும் கோபத்திற்கு ஆளாகி உள்ளது இது மேலும் ஈரானில் பதற்றத்தை  ஏற்படுத்தியுள்ளது .